பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அன்புமணிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்..
பாமகவில் தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது.. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அன்புமணிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.. மேலும் “ என் பெயரை போடக்கூடாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.. ஆனால் தொடர்ந்து என் பெயரை பயன்படுத்தி வருவதால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.. பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரத்திலேயே தொடர்ந்து செயல்படும்.. பொதுக்குழுவின் படி, கௌரவ தலைவராக ஜி.கே மணி செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார்..
புதிய நிர்வாகிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்க்ள்.. புதிய நிர்வாகிகள் பட்டியல் தொடர்பான விவரம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. என் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார் என்பது எனக்கு தெரியும்.. ” என்று தெரிவித்தார்..
மேலும் அன்புமணியின் நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும்.. அன்புமணியின் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு’ நடைபயணத்திற்கு தடை விதிக்கக்கோரி டிஜியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்..