சிறப்பு டயட்கள் வேண்டாம்.. எப்போதும் இளமையாக இருக்க டாக்டர் பால் கூறிய ஒரே எளிய விதி; நாகார்ஜுனா கூட பின்பற்றுகிறார்!

nagarjuna dr pal

பலரும் தங்கள் இளமையையும் ஆற்றலையும் காக்க சப்பிளிமெண்ட்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகள் அல்லது விலை உயர்ந்த நலத்திட்டங்களை நாடுகிறார்கள். ஆனால், ஒரு மருத்துவர் உண்மையான ரகசியம் அதைவிட எளிய ஒன்றில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.. அது வேறு எதுவும் இல்லை.. அதாவது இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது தான்..


இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பால், செரிமான ஆரோக்கியத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அவர் ஒரு வீடியோவில், இந்த சிறிய வாழ்க்கை முறை மாற்றம் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை விளக்கினார். சுவாரஸ்யமாக, அவரது ஆலோசனை இந்தியாவின் மிக ஆரோக்கியமான நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் பழக்கத்துடன் ஒத்துப்போகிறது. நாகர்ஜுனா 60 வயதைக் கடந்தும் தனது இளமைமிகு ஆற்றலுக்காக அடிக்கடி பாராட்டப்படுகிறார்.

சமூக ஊடக வீடியோவில் நாகர்ஜுனா கூறினார்:

“நான் இரவு உணவு சாப்பிடுவது 7 மணிக்கே — சாலட், சாதம், சிறிதளவு கோழி அல்லது மீன்.” என்று கூறியிருந்தார்.. டாக்டர் பால் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அந்த நடிகரின் பழக்கத்தை பாராட்டினார். மேலும் தனது “நாகா எனது பின்தொடர்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன், ஏனெனில் இது தான் நான் எப்போதும் கூறி வருகிறேன். இதுவே 60 வயதிலும் இளமையாக, ஆரோக்கியமாக, ஆற்றலுடன் இருக்க வேண்டிய ரகசியங்களில் ஒன்றாகும். இரவு 7 மணிக்குள் உணவு சாப்பிடுவது எல்லோருக்கும் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல பழக்கம்.” என்று பதிவிட்டுள்ளார்..

மருத்துவர் மேலும் விளக்கியதாவது, உணவு நேரம் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

“நம் உடலில் உள்ள அனைத்து செல்ல்களுக்கும் ஒரு தூக்க முறை உள்ளது. குறிப்பாக செரிமான மண்டல செல்ல்கள் இரவில் ஓய்வெடுக்கின்றன, குறிப்பாக சூரியன் மறைந்த பின். சூரிய ஒளி கண்களில் புகாதபோது செரிமான ஹார்மோன்களும் ஓய்வெடுக்கின்றன.”

ஏன் சீக்கிரம் இரவு உணவு முக்கியம்?

டாக்டர் பால் கூறியது: “மிகவும் தாமதமாக உணவு சாப்பிடுவது உடலின் மெட்டபாலிசத்தை (metabolism) பாதிக்கக்கூடும். நீங்கள் தாமதமாக சாப்பிடும்போது, நீங்கள் தூங்க முயலும்போதும் உங்கள் உடல் இன்னும் ஜீரணத்தில் ஈடுபட்டிருக்கும். இதனால் இரத்த சர்க்கரை மட்டம் மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கும். நீண்டகாலத்தில் இது மெட்டபாலிசத்தை பாதித்து, கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கக்கூடும். பல அறிவியல் ஆய்வுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன.. சீக்கிரம் உணவு முடிப்பவர்கள் நல்ல தூக்க தரம், மேம்பட்ட குடல்நலம், மற்றும் கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவற்றின் ஆபத்தை குறைப்பார்கள்.

அதாவது, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதல்ல முக்கியம், நீங்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்,” என அவர் வலியுறுத்தினார்.

மேலும் “ “நாகர்ஜுனா எனது ஆலோசனையைப் பின்பற்றி வருவதால், அவர் எனது சப்ஸ்கிரைபராகவே இருக்கலாம். நேரக்கட்டுப்பாட்டு உணவு பழக்கம் (time-restricted eating) — அதாவது இரவு உணவு மற்றும் அடுத்த உணவுக்கிடையில் சுமார் 16 மணி நேர இடைவெளி வைப்பது — உடல் இயல்பாகவே தன்னைச் சீரமைத்துக் கொள்ளவும் புதுப்பிக்கவும் உதவுகிறது.

“இளமையாக இருக்க கடுமையான டயட்டுகள் அல்லது சிக்கலான திட்டங்கள் தேவையில்லை. மாறாக, இரவு 7 மணிக்கு முன்னர் உணவு சாப்பிடும் பழக்கம் போன்ற எளிய, தொடர்ச்சியான பழக்கங்கள் நீண்டகால ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் காக்கும். தாமதமாக சாப்பிடும் பழக்கத்தைக் கைவிட முடியாதவர்களுக்குக் கூட, அவர்கள் விரும்பும் உணவுகளை, பிரியாணி கூட சூரியன் மறையும் முன் முடித்துவிடுங்கள்,” என ஆலோசனை வழங்கினார்.

Read More : 80 சதவீத ஐடி ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

RUPA

Next Post

Breaking : டெல்லி வெடிப்பு.. “சதிகாரர்கள் யாரும் தப்ப முடியாது.. சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்..” பூடானில் பிரதமர் மோடி சபதம்..!

Tue Nov 11 , 2025
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் மெதுவாகச் சென்ற கார் திடீரென வெடித்து சிதறியது.. இந்த சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.. 20 பேர் காயமடைந்தனர்.. இந்த நிலையில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த “சதிகாரர்கள் யாரும் தப்பமாட்டார்கள் என்றும் அவர்கள், தண்டிக்கப்படுவது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.. பூட்டானின் திம்புவில் பேசிய அவர் இந்த சம்வத்திற்கு […]
Prime Minister Narendra Modi 1

You May Like