நார்வே செஸ்!. குகேஷ் சாமர்த்திய மூவ்!. அதிருப்தியில் மேஜையை ஓங்கி அடித்த கார்ல்சன்!.

Norway Chess 11zon

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் குகேஷிடம் தோல்வியடைந்த அதிருப்தியில் கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல, நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நார்வேவின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் பேபினோ கரானாவை விட வெறும் ஒரு புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து குகேஷின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா கூறுகையில், ‘குகேஷின் திறமையை நாம் பாராட்ட வேண்டும். நீண்ட நேரம் அவர் தோல்வியின் விளிம்பில் மட்டுமே இருந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து போராடினார். ஆனால், கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்று கூறினார்.

Readmore: வருமான வரி தாக்கல்..!! இன்று முதல் தொடங்கியாச்சு..!! தாமதிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் எவ்வளவு அபராதம் தெரியுமா..?

KOKILA

Next Post

ஷாக்!. லட்டில் போதை மாத்திரை கலந்து தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை!. ஆசிரம சாமியாரின் கொடூர செயல்!.

Mon Jun 2 , 2025
உத்தரப் பிரதேசத்தில் லட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தடகள வீராங்கனையை ஆசிரம சாமியார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க […]
Rape 2025 2 1

You May Like