இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துக்கூட நடக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துக்கூட நடக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர், வெடிப்பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு அலகையும் ஆய்வு செய்த பிறகு, அறிக்கை அளிக்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.. விதிமீறல்கள் நடந்திருந்தால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது..
Read More : #Flash : திருப்பூரில் பயங்கரம்.. அடுத்தடுத்த வெடித்த 4 சிலிண்டர்கள்.. 42 வீடுகள் தரைமட்டம்..