ஜார்ஜியாவில் நடைபெற்று பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் 2வது ஆட்டமும் டிராவில் முடிந்தது.
ஜார்ஜியாவின் படுமி நகரில், 3வது ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். நேற்று முன்தினம் இவர்கள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று, 2வது ஆட்டம் நடந்தது.
திவ்யா கருப்பு நிற காய்களுடனும் ஹம்பி வெள்ளை நிற காய்களுடனும் களமிறங்கினார். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தினர். விறுவிறுப்பான இப்போட்டி 34வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. இதனையடுத்து ஸ்கோர் 1.0 – 1.0 என மீண்டும் சமநிலையில் உள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் ‘டை-பிரேக்கர்’ போட்டி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.