தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.. ஏப்ரல் 6-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்..
மார்ச் 30, ஏப்ரல், 2,4, 6 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மீதமுள்ள 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதாவது மார்ச் 31, ஏப்ரல் 1. 3, 5 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.. ஏப்ரல் 7 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யபடும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை கொளத்தூர் தொகுதில் வேட்புமனு தாக்கல் செய்தார்.. தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் 4-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்..
இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனு விவரங்கள் வெளியாகி உள்ளது.. அதன்படி, சொந்தமாக ஒரு வாகனம் கூட மு.க. ஸ்டாலின் பெயரில் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 90 சவரன் தங்கம் இருக்கிறது, முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.4.34 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் முதல்வர் மு.க ஸ்டாலினின் கையில் ரொக்கமாக இருப்பது ரூ.10,000 மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011, 2021, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.. 1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு,க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.. இதுவரை 7 முறை தேர்தல் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு..? தாய், தந்தைக்கு கடன் வழங்கியதாக வேட்பு மனுவில் தகவல்..!



