‘Fake fasting’ என்பது ஒருவர் தண்ணீர் மட்டும் குடித்து, எந்த உணவும், சப்பிள்மெண்ட்களும், மருந்துகளும் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை குறிக்கும் ஒரு உணவு முறையாகும். இது தண்ணீர் மட்டும் குடிக்கும் முறை என்றும் சாப்பிட்டுக் கொண்டே சாப்பிடாமல் இருப்பது போன்ற டயட் முறை fasting mimicking diet (FMD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடைக் குறைப்பு, இன்சுலின் செயல்பாடு மேம்பாடு, செல்களின் பழுதுபார்ப்பு போன்ற பல நன்மைகளுக்காக பிரபலமாகியுள்ளது.
இந்த உணவுமுறை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, கீட்டோன் அளவை மாற்றுவது, பல உயிரியல் குறியீடுகளை (biomarkers) நோக்கி வேலைசெய்வது போன்ற விளைவுகளை வழங்கும்..
சாதாரண ஃபாஸ்டிங்கில் மக்கள் எதையும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் fake fasting / FMD-இல், திட்டமிட்ட சில சத்துக்கள் குறைந்தளவில், சுழற்சிகளாக (cycles) எடுத்துக்கொள்ளப்படும்.
அறிவியல் ஆய்வு என்ன சொல்கிறது?
இந்த diet-இன் நன்மைகள் பற்றிய ஒரு ஆய்வு 2024-ல் Nature Communications என்னும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
ஆய்வில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்:
FMD என்பது 5 நாள் diet
இதில் unsaturated fats அதிகம்,
கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும்
இது தண்ணீர் நோன்பின் விளைவுகளைத் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது,
ஆனால் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் வழங்கும்
அதனால் மக்கள் இந்த நோன்பை எளிதாக முடிக்க முடிகிறது
இந்த diet-ஐ யார் உருவாக்கியது?
அமெரிக்காவின் USC Leonard Davis School-இன் பேராசிரியர் Valter Longo இந்த diet-ஐ உருவாக்கியவர்.
அவர் கூறியது:
“இந்த ஆய்வு, உணவின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு முறை,
எந்த பெரிய வாழ்க்கை முறைய மாற்றங்களும் தேவையில்லாமல்,
மனிதரை உயிரியல் ரீதியாக இளமையாக்க முடியும் என்பதை
முதல் முறையாக நிரூபிக்கிறது.”
அதாவது வயதானதைத் தடுக்கவும், நோய்களுக்கு எதிரான பல அம்சங்களை மேம்படுத்தவும் FMD உதவ முடியும் என்பதே ஆய்வின் முடிவு.
ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?
ஆய்வாளர்கள், 18 முதல் 70 வயதுக்கிடையில் உள்ள ஆண்-பெண் பெற்றோரை கொண்டு இரு clinical trial குழுக்களில் இந்த diet-இன் விளைவுகளை ஆய்வு செய்தனர். FMD (fasting-mimicking diet) குழுவில் randomised செய்யப்பட்டவர்கள் 3–4 மாத சுழற்சிகளில் diet-ஐ பின்பற்றினர்:
5 நாட்கள் FMD
அதற்கு பிறகு 25 நாட்கள் சாதாரண உணவு
இதுவே ஒரு cycle.
FMD-இல் என்ன என்ன உணவுகள்?
5 நாட்கள் diet-இல் கீழ்கண்டவை இருந்தன:
தாவர அடிப்படையிலான (plant-based) சூப்கள்
எரிசக்தி பார்கள் (energy bars)
எரிசக்தி பானங்கள்
சிப் போன்ற snacks
தேநீர்
அதிக அளவு கனிமங்கள் (minerals), வைட்டமின்கள், மற்றும் முக்கிய கொழுப்பு அமிலங்கள் (essential fatty acids) கொண்ட supplement
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்
FMD diet பின்பற்றியவர்களுக்கு:
சர்க்கரை நோயின் அபாயம் குறைந்தது
இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) குறைந்தது
HbA1c அளவு குறைந்தது
பேராசிரியர் வால்டர் லாங்கோ இதுகுறித்து பேசிய போது “ இது இரண்டு clinical trials-ல், உயிரியல் வயது குறைந்திருப்பதை முதல் முறையாக உறுதிப்படுத்துகிறது.
மேலும் metabolism மற்றும் immune system செயல்பாடுகளும் மீளுருவாக்கம் பெறுகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல மருத்துவர்கள் ஏற்கனவே FMD-ஐ பரிந்துரைக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள், அதிக நோய் அபாயக் காரணிகள் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், தங்களை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கும் FMD cycles பரிந்துரைக்க மருத்துவர்களை மேலும் ஊக்குவிக்கும்.” என்று கூறினார்..
எனினும் FMD-ஐ எத்தனை நாட்கள் பின்பற்ற வேண்டும்? எத்தனை தடவை செய்ய வேண்டும்? நீண்ட கால பாதுகாப்பும், செயல்திறனும் எப்படி? இவை அனைத்துக்கும் இன்னும் முழுமையான பதில் இல்லை; மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
Read More : புற்றுநோயை கட்டுப்படுத்தும் டேன்டேலியன்!. கல்லீரல், சிறுநீர் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு!. நன்மைகள் இதோ!



