“நல்ல நடிகர் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” மலையாள நடிகர் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

rajinikanth sreenivasan

உடல்நலக்குறைவால் காலமான மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்..

பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான ஸ்ரீனிவாசன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.. கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.. அவருக்கு வயது 69. நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் உயிரிழந்தார். கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், கடந்த பல ஆண்டுகளாக கொச்சியில் வசித்து வந்தார்.


நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதித்தவர்.. இவர் சென்னை ஃப்லிம் இன்ஸ்டியூட்டில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒன்றாக படித்தவர் ஆவார்.. நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பின்னணிக் குரல் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்டவராக இருந்தார்..

1976-ல் ‘மணிமுழக்கம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது இரண்டு மகன்களான வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் மலையாள திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருகின்றனர்..

நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில் மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.. நடிப்பு பள்ளியில் என்னுடன் ஒன்றாக படித்தர நடிகர் ஸ்ரீனிவாஸ், அவரது இறப்பு செய்தி அதிர்ச்சி அடைந்தேன்.. ஸ்ரீனிவாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர்.. என்று தெரிவித்துள்ளார்..

Read More : பெரும் சோகம்..! பிரபல மலையாள நடிகர் – இயக்குனர் ஸ்ரீனிவாசன் காலானார்..! திரையுலகினர் இரங்கல்..!

English Summary

Actor Rajinikanth has expressed his condolences on the passing of Malayalam actor Srinivasan, who died due to illness.

RUPA

Next Post

கண் சிமிட்டும் நேரத்தில் திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்! இந்த நாட்டில் தான் உலகின் அதிவேக இண்டர்நெட் உள்ளது!

Sat Dec 20 , 2025
In this post, we will look at which country in the world has the fastest internet and what the internet speed is there.
internet speed

You May Like