வாகன ஓட்டிகளே…‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ இனி யாருக்கும் கவலை வேண்டாம்…! புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு…!

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இன்னல்களையும் சந்திக்க நேர்ந்தது.


மேலும், வர்த்தக சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சாலை போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாகச் சென்று சமர்ப்பிப்பது, நேர விரய நடைமுறையாக இருந்தது. எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர்/ தயாரிப்பாளர்/ மோட்டார் வாகனங்களின் இறக்குமதியாளர் அல்லது 126 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை முகமை மட்டுமே வைத்திருக்க முடியும்.

Vignesh

Next Post

இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்...!

Sun Sep 18 , 2022
இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலையிலான  மத்திய அமைச்சரவை இந்திய போக்குவரத்து துறையில் சர்வதேச போக்குவரத்து கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம், 6,ஜூலை, 2022 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம்புதிய அறிவியல் முடிவுகள், புதிய நுண்ணறிவு கொள்கை, விஞ்ஞான தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் திறனை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்திறன்களை […]
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

You May Like