இனி சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றலாம்!. ஆண்டுதோறும் 5000 கிலோ கிடைக்கும்!. புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம்!.

us startup gold 11zon

பாரம்பரிய ஆல்கெமிஸ்ட் முறைபோல, சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க மற்றும் எகிப்திய ரசவாத நூல்களைப் படித்து செயற்கையாகத் தங்கத்தை பலர் உருவாக்க முயன்றனர். இவர்களில் கெபர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் வேதியியல் நுட்பங்களைக் கொண்டு ஈயம் போன்ற உலோகங்களைத் தங்கமாக்க முயன்றார். இப்படிப் பல நூற்றாண்டுகளாகவே ஈயத்தைத் தங்கமாக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், சர் ஐசக் நியூட்டன் முதல் பண்டைய எகிப்தியர்கள் வரை, வரலாற்றில் மிகச்சிறந்த வல்லுநர்கள் அடிப்படை உலோகங்களை தங்கமாக மாற்றும் சாத்தியக்கூறுகளால் ஈர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மராத்தான் ஃபியூஷன், பாரம்பரிய ஆல்கெமிஸ்ட் முறைபோல, சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்றும் புதிய முறையை கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி என்று கூறப்படுகிறது. பாதரச ஐசோடோப்புகளை உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான் தாக்குதலுக்கு உட்படுத்துவதன் மூலம், பாதரசத்தை தங்கமாக மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடித்ததாக மாரத்தான் ஃபியூஷன் கூறுகிறது.

இரு ஹைட்ரஜன் ஐசோடோப்புகளை இணைத்து ஹீலியம் உருவாக்கும் செயல்முறை, அதாவது அணுக்கரு இணைவு (nuclear fusion) நடைபெறும் போது நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன. இதனால், மின் உற்பத்தியும் ஆல்கெமி (உலோக மாற்றும்) செயல்முறையும் ஒன்றோடொன்று இணைந்தே நடைபெற முடியும் என்று கூறப்படுகிறது. “முந்தைய முயற்சிகளுடன் ஒப்பிடும்போது, எங்கள் அணுகுமுறை பொருளாதார ரீதியாக கவர்ச்சிகரமானது, நடைமுறை ரீதியாகச் சாத்தியமானது, மேலும் மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்தக்கூடியது,” என Marathon Fusion நிறுவனம் தெரிவித்தது. மேலும், “இப்போது முற்றிலும் புதிய பொற்காலம் தொடங்குகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், முன்மொழியப்பட்ட இந்த தொழில்நுட்பம் குறித்த அறிவியல் கட்டுரையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், உருவாகிக்கொண்டிருக்கும் அணுக்கரு இணைவு தொழில்துறைக்கான எரிபொருள் செயலாக்கம் மற்றும் மறுசுழற்சி முறைகள் தொடர்பாகவும் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், அந்த கட்டுரைக்கு இதுவரை சரிபார்ப்பு மதிப்பீடு (peer review) செய்யப்படவில்லை.

ஆல்கெமி (Alchemy) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதன் முக்கிய இலக்குகள் இரண்டு உலோகங்களை தங்கமாக மாற்றுவது மற்றும் மரணமில்லா உயிர் வழங்கும் எலிக்சிர்(அமுதம்) (elixir of immortality) ஒன்றை கண்டுபிடிப்பதுதான். இது, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “புவியீர்ப்பு விசை” (Law of Universal Gravitation) எனும் கணிதச் சட்டத்தை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் சர் ஐசக் நியூட்டன் உள்ளிட்ட வல்லுநர்களை கவர்ந்துள்ளது.

மாரத்தான் நிறுவனத்தின் அணுகுமுறையில், ஒரு பொதுவான வகை பாதரசமான மெர்குரி-198 முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணுக்கள் நியூட்ரானால் தாக்கப்படும்போது, குறைந்த நிலைத்தன்மை கொண்ட பாதரசம்-197 ஆக மாறுகின்றன. பின்னர் அந்த அணுக்கள் சில நாட்களில் தன்னிச்சையாக தங்கத்தின் நிலையான வடிவமாக மாறுகின்றன.

மராத்தானின் கூற்றுப்படி, “எரிபொருள் தன்னிறைவு அல்லது மின் உற்பத்தியில் எந்த சமரசமும் இல்லாமல்” இணைவு செயல்முறையின் துணை விளைபொருளாக தங்க விநியோகங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை இது குறிக்கிறது. அதாவது, ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் இந்த புதிய முறையைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 5,000 கிலோகிராம் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் உருவாகும் தங்கம் நிலையானதாக இருந்தாலும், அதில் சில ரேடியோசக்தி கொண்ட தங்க ஐசோட்டோப்புகள் இருக்கலாம். அவை 18 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மராத்தான் நிறுவத்தின் தொழில்நுட்ப-பொருளாதார மாதிரிகள் fusion தொழிற்சாலைகள், தங்க உற்பத்தியிலிருந்து எவ்வளவு பொருளாதார மதிப்பை உருவாக்க முடியுமோ, அதே அளவு பொருளாதார மதிப்பை மின்சார உற்பத்தியிலிருந்து உருவாக்க முடியும் என்று கூறுகிறது. இதனால் அந்த வசதிகளின் மதிப்பு இரட்டிப்பு அடைய வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அணுக்கரு இணைவு மற்றும் மின் சக்தியின் பொருளாதார அமைப்புகள் பெரிதும் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்தது.

மேலும், தங்கத்துடன் கூடுதலாக, “அணு பேட்டரிகள்”, மருத்துவ ஐசோடோப்பு தொகுப்பு மற்றும் பல்லேடியம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான பொருட்களை உருவாக்க இந்த புதிய செயல்முறைyஐ பயன்படுத்தப்படலாம் என்று அது கூறியது.

Marathon நிறுவனத்தை SpaceX-இல் முன்னாள் பொறியாளர் ஆன ஆடம் ருட்கோஸ்கி மற்றும் முன்னாள் கூகிள் சிஇஓ எரிக் ஷ்மிட் நிறுவிய Schmidt Futures என்ற ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உள்ள கயில் ஷில்லர் ஆகியோர் நிறுவினர். இந்த முறை மின் உற்பத்தி நிலையங்கள் ஆண்டுதோறும் ஒவ்வொரு ஜிகாவாட் ஆற்றலிலும் (~2.5 GWth) 5,000 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது, இது மின் உற்பத்தி அல்லது எரிபொருள் தன்மை பாதிக்கப்படாமலும் செய்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.

Readmore: ‘நான் இல்லையென்றால், உலகில் 6 போர்கள் நடந்திருக்கும்’!. பெருமை பேசும் டிரம்ப்!.

KOKILA

Next Post

மக்களே உஷார்..! இதை செய்ய தவறினால் உங்க ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்...!

Tue Jul 29 , 2025
தமிழகத்தில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு […]
ration 2025

You May Like