”இனி எல்லாம் மாறப்போகுது”..!! பட்ஜெட்டில் மின்சாரத்துறை சார்பில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்..!!

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மின்சாரத்துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. கடந்த நிதியாண்டில் மின் துறையில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்ததாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளால் 200 கோடி ரூபாய்க்கான இழப்பை குறைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் 3,088 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்து வரும் நிலையில், அவற்றை 20,000 மெகாவாட் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறும் என கூறப்படுகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, ஒரே இடத்தில் இரட்டை மின் இணைப்பை பெற்றிருந்தால் ஒரே மின் இணைப்பாக மாற்றுவது போன்றவை இடம்பெறலாம் என தெரிகிறது. தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புகள், கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கான வடசென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் கட்டப் பணிகள், காற்றாலை மூலம் மின் உற்பத்தி என பல்வேறு அறிவிப்பு வெளியிட மின்சாரத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதம் ஒருமுறை மின் கணக்கீடும் முறை, ஆண்டுதோறும் கட்டண உயர்வை தவிர்க்க மாற்று நடவடிக்கை குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

CHELLA

Next Post

சூப்பர் சலுகைகளை அறிவித்த ஃபிளிப்கார்ட்..!! ஸ்மார்ட் டிவி முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை..!!

Sat Mar 18 , 2023
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை Flipkart APPLIANCES BONANZA விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள், ஃபிரிட்ஜ், மின்விசிறிகள், சமையல் உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மைக்ரோவேவ்ஸ், ஏசி ஆகியவற்றுக்கு ஃப்ளிப்கார்ட் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. 4K ஸ்மார்ட் டிவிகள்: இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் உள்ளன. குறிப்பாக, 4K ஸ்மார்ட் டிவிகளை […]
47089 flipkart price drop official website

You May Like