இனி ரோபோக்களும் வலியை உணரும்..! செயற்கை தோலை உருவாக்கிய விஞ்ஞானிகள்..! மனிதர்களை போன்ற அனிச்சை செயல்!

robo

ஒரு சூடான அடுப்பை தொடுவதாக கற்பனை செய்து பாருங்கள். என்ன நடந்தது என்பதை நீங்கள் முழுமையாக உணர்வதற்கு முன்பே, உங்கள் கை உடனடியாகப் பின்னால் இழுக்கப்படுகிறது. இந்த விரைவான செயல், உங்கள் தோலில் உள்ள வலி உணர்விகள் உங்கள் தண்டுவடத்திற்கு சமிக்ஞைகளை அனுப்புவதால் நிகழ்கிறது; இது மூளைக்காகக் காத்திருக்காமல் ஒரு அனிச்சைச் செயலைத் தூண்டுகிறது.


இப்போது, ​​விஞ்ஞானிகள் தொடுதல் மற்றும் வலியை உணர்ந்து உடனடியாக எதிர்வினையாற்றக்கூடிய மேம்பட்ட செயற்கைத் தோலை ரோபோக்களுக்கு வழங்குவதன் மூலம், அவற்றுக்கு இதே போன்ற திறன்களை உருவாக்கி வருகின்றனர். ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், தற்போதுள்ள பெரும்பாலான ரோபோக்களின் மின்னணுத் தோல்கள் எளிமையானவை என்றும், அழுத்தம் போன்ற அடிப்படைப் பணிகளை மட்டுமே செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசிய போது “ இன்றைய பெரும்பாலான ரோபோ மின்னணு தோல்கள் மிகவும் எளிமையானவை. அவை அதிகபட்சம் அழுத்தத்தை மட்டும் உணர முடியும். தொடுதல், காயம், வலி போன்ற உணர்வுகளை உணரும் திறன் இல்லை. அதனால், ரோபோக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் உடனடி பிரதிசெயல்களை செய்ய முடியாமல் உள்ளன.

இதற்கு மாற்றாக, ஆராய்ச்சியாளர்கள் மனித நரம்புத் தளத்தை (nervous system) மாதிரியாக கொண்டு, நியூரோமார்ஃபிக் ரோபோ எ-ஸ்கின் (neuromorphic robotic e-skin) எனும் புதிய தோலை உருவாக்கியுள்ளனர்.

இந்த தோலின் சிறப்பம்சங்கள்:

மிகச் சிறிய தொடுதலையும் உணரும் திறன்

ஆபத்தான அல்லது பலமான தொடுதலை ‘வலி’ என அடையாளம் காணும் திறன்

உடனடி பிரதிசெயல் (local reflex) – அதாவது, ரோபோ தனது மைய கணினியின் உத்தரவுக்காக காத்திருக்காமல், தானாகவே ஆபத்திலிருந்து விலகும்

மாட்யூலர் அமைப்பு – காயம் ஏற்பட்டால் விரைவாக பழுது சரி செய்யும் வசதி

அதாவது இந்த புதிய ரோபோ தோல், மனித தோலைப் போலவே செயல்படுகிறது. மென்மையான தொடுதலையும் உணரும். ஆபத்தான தொடுதலை ‘வலி’ என புரிந்துகொள்கிறது. வலியைக் கண்டதும், மனிதர் கை இழுப்பதைப் போல, ரோபோவும் உடனே பின்னே விலகுகிறது. இதற்கு அதன் மைய கணினியிடமிருந்து கட்டளை வர தேவையில்லை.

எதிர்கால ரோபோக்களில் பெரிய மாற்றம்

“இன்றைய பல ரோபோக்களுக்கு தொடுதலை உணரும் திறனே இல்லை. சிலருக்கு இருந்தாலும், அவை வெறும் அழுத்தத்தை மட்டும் கண்டறியும். இந்த புதிய தொழில்நுட்பம் வந்தால், ரோபோக்கள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும்.. மனிதர்களுடன் பாதுகாப்பாக இணைந்து வேலை செய்யும். தொழிற்சாலைகள், மருத்துவம், மீட்பு பணிகள் போன்ற துறைகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.” என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பழைய ரோபோ அமைப்புகளில், தோலில் ஏற்பட்ட தொடுதல் குறித்த தகவல் முதலில் மென்பொருளுக்கு (software) அனுப்பப்படும். அங்கு படிப்படியாக பகுப்பாய்வு செய்யப்பட்ட பிறகே ரோபோ எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படும். இந்த முறை தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வளையத்திற்குள் வேலை செய்யும் ரோபோக்களுக்கு போதுமானதாக இருக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு மிக அருகில் இயங்கும் ஹ்யூமனாய்டு ரோபோக்களுக்கு இது போதுமான பாதுகாப்பாக இல்லை.

மனிதர்களைப் போல ரோபோக்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக்கொள்ள முடியாது. ஆனால் அதற்கு மாற்றாக, விரைவான மற்றும் எளிய பழுதுபார்த்தல் தான் சிறந்த தீர்வு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புதிய ரோபோ தோலின் செயல்பாடு

இந்த புதிய தோல், தொடுதல் தகவலை நரம்பு அலைகளைப் போல (neural-like pulses) மாற்றி அனுப்புகிறது. வலி அல்லது ஆபத்து உணரப்பட்டவுடன் உடனடி பாதுகாப்பு அனிச்சை செயலை இயக்குகிறது. தோலில் சேதம் ஏற்பட்டதை தானாகவே கண்டறியும் திறன் கொண்டது

சேதத்தை உடனே அறியும் முறை

இந்த தோல் சிறிய சிறிய மாட்யூல்களாக (modules) உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாட்யூலும் தான் சரியாக இயங்குகிறது என்பதை குறிக்க குறைந்த அதிர்வெண் (low-frequency) சிக்னலை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கும். அந்த மாட்யூல் கிழிந்தாலோ, வெட்டப்பட்டாலோ, சேதமடைந்தாலோ அந்த சிக்னல் உடனே துண்டிக்கப்படும். இதன் மூலம், ரோபோக்கு தோலில் எந்த இடத்தில் சேதம் ஏற்பட்டது என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். மனிதர் காயமடைந்தால் உடனே வலியை உணரும் போல், இந்த ரோபோவும் தனது ‘தோல்’ சேதமடைந்ததை உடனே உணர்ந்து தேவையான நடவடிக்கையை எடுக்க முடியும்.

RUPA

Next Post

“நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி..” கனிமொழிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

Mon Jan 5 , 2026
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இந்த நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞ்சர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழிக்கு பிறந்த்நாள் வாழ்த்து […]
stalin kanimozhi

You May Like