’இனி ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு இது கட்டாயம்’..!! புதிய விதிமுறைகள் அமல்..!!

இனி ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு முறையில் ஏற்படும் மாற்றங்களை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. புதிய விதிகளின்படி, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு உங்கள் கணக்கை சரிபார்க்க வேண்டும். ஆண்டு எண்ணில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பு பயனர்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை சரி பார்க்க வேண்டும். அது இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

’இனி ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு இது கட்டாயம்’..!! புதிய விதிமுறைகள் அமல்..!!

கொரோனா தொடங்கியதில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி கணக்கில் இருந்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யாத பல பயணிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முதலில் ஐ.ஆர்.சி.டி.சி அப்ளிகேஷன் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள verify ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைலில் நல்லது மின்னஞ்சல் ஐடி உள்ளிட வேண்டும். பிறகு வெரிஃபை பட்டனை கிளிக் செய்து உங்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும். அதனைப் போலவே மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு உங்கள் இ-மெயில் ஐடி சரிபார்க்கப்படும். .

CHELLA

Next Post

குழந்தையுடன் ரன்பீர் கபூர்… பிரசவத்திற்கு பின்னர் ஆலிய-வின் முதல் போட்டோ வைரல்!!

Thu Nov 10 , 2022
பாலிவுட் நடிகை ஆலியா பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் முதன் முதலாக குழந்தையுடன் வீடுதிரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆலியாபட் – ரன்பீர் கபூர் தம்பதியினர் கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்கள். ரன்பீர்-ஆலியா தங்கள் குழந்தையுடன் காரில் வீடு திரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகின்றது. இந்த புகைப்படத்தில் ரன்பீர் குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றார். ஆலியாபட் அருகில் […]
whatsapp image 2022 11 10 at 9.57.50 am 1

You May Like