இனி ரூ.500 செலவில் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியலாம்..!! யாருக்கு அவசியம்..? சென்னையில் அதிநவீன வசதி..!!

Heart 2025

தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால், இளம் வயதினரிடையே திடீர் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதும், நடனமாடும்போதும், நடைபயிற்சியின்போதும் திடீரென ஏற்படும் மாரடைப்பு சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வருகின்றன. எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத இளைஞர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.


இந்த அபாயகரமான காலகட்டத்தில், இருதய அடைப்புகளை கண்டறியும் வழக்கமான ஆஞ்சியோகிராம், கார்டியாக் சிடி ஸ்கேன், இசிஜி மற்றும் எக்கோ போன்ற பரிசோதனைகள் இருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக செயல்படும் ஒரு புதிய பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ‘CT Calcium Scoring’ என்ற அதிநவீனப் பரிசோதனை முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

யாருக்கு இந்த சோதனை தேவை..?

உடல் பருமன், பாரம்பரியமாக இருதய நோய் உள்ளவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், புகைப்பழக்கம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தங்களது இதயத்தில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா இல்லையா என்பதைத் துல்லியமாக அறிய இந்தப் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் பரிசோதனை மூலம், இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதா, எந்த இடத்தில் அடைப்பு உள்ளது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது போன்ற விவரங்களை துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். அதிநவீன சிடி ஸ்கேன் கருவி மூலம் செய்யப்படும் இந்தப் பரிசோதனை, ஊசிகள் மற்றும் மருந்துகள் இன்றி, வெறும் 2 நிமிடங்களில் முடிவுகளை வழங்குகிறது.

இந்தப் பரிசோதனையின் முடிவுகள் மூலம், ஒருவருக்கு ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்னைகளுக்கு தற்போது எடுத்துக் கொள்ளும் மருந்துகளே போதுமானதா அல்லது ஆஞ்சியோ போன்ற அடுத்தகட்டப் பரிசோதனைகள் தேவையா என்பதில் மருத்துவர்கள் ஒரு இறுதி முடிவுக்கு வர முடியும். மிக முக்கியமாக, இந்தப் பரிசோதனையின் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும்.

மாரடைப்பு வரும் நிலை 35 வயதிலேயே உருவாகி வருவதால், குறிப்பிட்ட வயதினர் மட்டுமே செய்ய வேண்டும் என்ற வரம்பு இல்லை. 30 வயதை கடந்த எவரும், மாரடைப்பு வராமல் தடுக்க விரும்பும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள், பரம்பரையில் இருதய நோய் உள்ளவர்கள் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் போன்றோர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இந்தப் பரிசோதனைக்கு வெறும் ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது. முழு உடல் பரிசோதனைக்கு வரும் மக்களுக்கு அந்தத் தொகுப்பிலேயே இந்தப் பரிசோதனையும் சேர்க்கப்பட்டுள்ளதால், தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தனியார் மருத்துவமனைகளில் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை வசூலிக்கப்படும் இந்தப் பரிசோதனையை, வெறும் இரண்டு நிமிடங்களில் குறைந்த கட்டணத்தில் செய்துகொள்ளும் வாய்ப்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் கிடைத்துள்ளது.

Read More : கூடவே பழகிட்டு என் பொண்டாட்டி கூட எப்படி..? ஃபுல் போதையில் இளைஞரை வெட்டி சாய்த்த கள்ளக்காதலியின் கணவன்..!!

CHELLA

Next Post

அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. பணமோசடி வழக்கில் ED அதிரடி..!

Mon Nov 3 , 2025
பணமோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் (Reliance Anil Ambani Group) தொடர்புடைய நிறுவனங்களின் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.. இந்த உத்தரவு 2025 அக்டோபர் 31 அன்று, பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) பிரிவு 5(1) அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. முடக்கப்பட்ட […]
anil ambani ed

You May Like