பொதுமக்களின் ரயில் பயணத்தை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே சமீபத்தில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுகள், காத்திருப்பு டிக்கெட்டுகள், முன்பதிவு கட்டணங்கள், தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பின் கீழ் ரயில் டிக்கெட்டின் கட்டணத்தை EMI மூலம் தவணைகளில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது மட்டுமல்லாமல், நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான பல்வேறு சுற்றுலா தொகுப்புகளையும் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. பாரத் கௌரவ் யாத்ரா என்று அழைக்கப்படும் நாட்டின் புகழ்பெற்ற புனித யாத்திரைத் தலங்களுக்கு இந்திய ரயில்வேயால் சிறப்பு சுற்றுலா தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பாரத் கௌரவ் ரயில்களில் பயணிக்க நீங்கள் EMI தவணைகளில் முன்பதிவு செய்யலாம்.
இந்த சலுகை இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில்களுக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட ரயில்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஐஆர்சிடிசி தனது பாரத் கௌரவ் ரயில்களுக்கு மட்டுமே இந்த சலுகையை வழங்குகிறது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நீங்கள் EMI விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். செப்டம்பர் 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை இயங்கும் பாரத் கௌரவ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இந்த ரயிலின் எகனாமி வகுப்பு கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 18460 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உங்கள் ஸ்லீப்பர் வகுப்பு ரயில் டிக்கெட், ஹோட்டல் தங்கும் வசதி ஆகியவை அடங்கும்.
அதே நேரத்தில், மூன்றாவது வகுப்பு ஏசி பெட்டியின் கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 30480 ஆக உள்ளது. மேலும், கம்ஃபோர்ட் வகையின் ரயில் டிக்கெட் கட்டணம் ரூ. 40300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிறையப் பேருக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒரே அடியாகச் செலுத்துவது சிரமமாக இருக்கலாம். எனவே இந்திய ரயில்வே EMI வசதியை வழங்கியுள்ளது.
பாரத் கௌரவ் ரயில்களில் கட்டணத்தை செலுத்த ரயில் பயணிகள் EMI வசதியைப் பெறலாம். இதற்காக, இந்திய ரயில்வே பல அரசு மற்றும் தனியார் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. IRCTC வலைதளம் மூலம் ரயில் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட் கட்டணம் செலுத்தும் போது நீங்கள் EMI விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். முன்பதிவு வசதி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: நாளை ஆடி அமாவாசை!. முன்னோர்களுக்கு இந்த நேரத்தில் திதி கொடுத்தால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்!