பெரம்பூரில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார் நாதக வேட்பாளர்..! விஜய் எப்போது செய்கிறார்..?

vijay 1

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்..


இந்த நிலையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.. எனினும் இந்த 8 நாட்களில் 4 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

மார்ச் 30, ஏப்ரல், 2,4, 6 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மீதமுள்ள 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதாவது மார்ச் 31, ஏப்ரல் 1. 3, 5 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது..

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.. தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.. சென்னை வில்லிவாக்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஆதவ் அர்ஜுனா.

இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் வெற்றித்தமிழன் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.. அதே போல் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.. பெரம்பூரில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்..

கோபி தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் செங்கோட்டையனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.. சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் களமிறங்கும் மா.சுப்பிரமணியன் இன்று வேட்புமனு செய்தார்..

RUPA

Next Post

Walking: 20 நாட்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் நடந்தால் உடம்புல இந்த மாற்றம் உண்டாகும்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Mon Mar 30 , 2026
Walking: If you walk for 10 minutes every day for 20 days, this will change your body..!
Walking Routine

You May Like