திருச்சியில் நடந்த நாதக – மதிமுக தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து திருச்சி முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018-ம் ஆண்டு மே 19-ம் தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வைகோ சென்ற போது, நாதகவினர் கூச்சலிட்டதால் மோதல் ஏற்பட்டது.. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து மதிமுக, நாதக நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட இரு தரப்பையும் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி 2-வது கூடுதல் நீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது..
இந்த நிலையில் இந்த மோதல் வழக்கில் திருச்சி முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. குற்றம்சாட்டப்பட்ட 19 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் 18 பேர் நேரில் ஆஜரானார்கள்.. 2 தலைவர்களும் வரும் தொண்டர்கள் தாக்கிக்கொண்டாலும், இந்த மோதல் வழக்கில் சாட்சியங்கள் முறையாக இல்லை என்று கூறி சீமான் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து திருச்சி முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது..
Read More : “துயரம் வதைக்கிறது.. என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் அஞ்சலி..” முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..