குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 1,270ஆக அதிகரிப்பு.. TNPSC அறிவிப்பு..!

group 2 tnpsc 2025

குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை 1,270ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. டிஎன்பிஎஸ் வெளியிட்டு அறிக்கையில் “ சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள், குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (18.11.2025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1270 ஆகும்.


ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, குரூப் 2 ஏ 2022-ம் ஆண்டு அறிவிக்கையில் ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024-ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், ஆக மொத்தம் ஏழு நிதியாண்டுகளுக்கு 8784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத்துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! கனமழை கொட்டி தீர்க்கும்..! வானிலை மையம் அலர்ட்..!

RUPA

Next Post

Cloudflare டவுன் : உலகளவில் X, ChatGPT, Spotify என பல வலைத்தளங்கள் செயலிழப்பு..! என்ன காரணம்?

Tue Nov 18 , 2025
இன்று உலகம் முழுவதும் எக்ஸ் (X), கேன்வா (Canva), ஓப்பன்ஏஐ (OpenAI) மற்றும் ஸ்பாட்டிஃபை (Spotify) உள்ளிட்ட பல முக்கிய இணையச் சேவைகள் முடங்கியதால், பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேவை முடக்கம் மற்றும் புகார்கள் பயனர் புகார்கள்: இன்று காலை 11 மணி அளவில் இருந்து பயனர்கள் தங்கள் சேவைகளை அணுக முடியவில்லை எனப் புகார்கள் அளிக்கத் தொடங்கினர். டவுன்டிடெக்டர் (Downdetector) அறிக்கை: மாலை 6 மணிக்குள், சேவை […]
cloudflare down reason from x to chatgpt list of all the apps affected by the outage 1

You May Like