மரணத்தை பரிசாக தரும் உடல் பருமன்..!! இந்தியாவில் மட்டும் 25 கோடி பேர்..!! ஆய்வில் வெளியான பகீர் தகவல்..!!

Weight 2026

இந்தியாவில் உடல் பருமன் என்பது வெறும் உணவுப் பழக்கம் சார்ந்த தனிநபர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான ‘தேசிய சுகாதார அவசரநிலை’ என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்க தொடங்கியுள்ளன. ‘கிளினிக்கல் ஒபிசிட்டி’ (Clinical Obesity) இதழில் வெளியான சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 25.4 கோடி (254 மில்லியன்) மக்கள் பொதுவான உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனை வெறும் வாழ்க்கைமுறை மாற்றமாகப் பார்க்காமல், ஒரு ‘நீண்டகால நோய்’ (Chronic Disease) என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினமானது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் அப்பட்டமாக காட்டியுள்ளன. ஆய்வில் பங்கேற்றவர்களில் 84 விழுக்காட்டினர் உடல் எடையைக் குறைக்க தீவிரமாக முயன்றுள்ளனர். ஆனால், அதில் வெறும் 4.7 விழுக்காட்டினரால் மட்டுமே தங்களது இலக்கை எட்டி, ஓராண்டுக்கும் மேலாக எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. உடல் பருமன் என்பது சிகிச்சை அளித்தாலும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஒரு சிக்கலான நோய் என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

தற்போதைய புள்ளி விவரங்களின்படி, 25.4 கோடி பேர் பொதுவான உடல் பருமனுடனும், 35.1 கோடி பேர் வயிற்றுப்பகுதி பருமனுடனும் வாழ்ந்து வருகின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், குழந்தைகளிடையே இந்தப் பாதிப்பு காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் தொற்றாநோய்களால் ஏற்பட்ட 5.79 லட்சம் உயிரிழப்புகளுக்குப் பின்னணியில், உடல் பருமன் தொடர்பான சிக்கல்கள் மறைமுகக் காரணமாக இருந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகன் உள்ளிட்ட வல்லுநர்கள், இந்தச் சவாலை எதிர்கொள்ள மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். “உடல் பருமனை ஒரு நோயாக அரசு அங்கீகரிக்க வேண்டும். சத்தான உணவுகளுக்கு மானியம் வழங்குவது, உடற்பயிற்சிக் கூடங்களை பரவலாக்குவது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதான கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது மட்டுமே வருங்காலத் தலைமுறையை இந்தப் பாதிப்பில் இருந்து காக்கும்,” என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உணவுப் பிரச்னையாகக் கருதப்பட்ட உடல் பருமன், இன்று இந்தியாவின் எதிர்கால ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

Read More : 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 வேண்டுமா..? மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

ரேஷன் கார்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா..? இன்று மாபெரும் சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Feb 14 , 2026
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் சிறப்பு குறைதீர் முகாம் இன்று (பிப்ரவரி 14, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம், பிற்பகல் 1 மணி வரை […]
Ration Card 2026

You May Like