ஒடிசா மாநிலத்தின் ஷாலிமாறிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த 2ஆம் தேதி பயணித்துக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசூர் மாவட்டம் பாகா மஹா பஜார் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரும்பு தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும் அருகில் இருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெங்களூரு ஹவுரா விரைவு ரயில் கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 275 பேர் பலியாகினர். அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஒடிசாவின் தலைமைச் செயலாளர் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் ரயில் விபத்தில் பலியானவர்களில் இதுவரையில் 151 உணவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன இன்றும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல உரிய செயல்முறைக்கு பின்னர் அனைத்து உடல்களும் தொடர்புடையவர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவவில்லை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அரசை ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.