குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது மகனை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷியாமிவாலா கிராமத்தில் 56 வயது தாயை, மகனே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் மகன் என்றும் பாராமல் வெட்டிக் கொலை செய்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமணம் ஆகாத தனது மகன் அசோக், குடிபோதைக்கு அடிமையானதாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால், கேவலமாக நினைப்பார்கள் என நினைத்து, இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.
மீண்டும் தனது மகன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், இதனால், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மகனை வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், அடையாளம் தெரியாத நபர்களால், தனது மகன் கொலை செய்யப்பட்டதாக அந்த கிராமத்தினரை நம்ப வைத்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, அசோக் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரத்தக் கறை படிந்த துணிகளையும், ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்தனர்.