ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், 50 வயதான ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறை – கோவை மெயின் ரோட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வசித்து வருபவர் சங்கர் எனப்படும் ஜெய்சங்கர் (வயது 50). இவர், அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி தனியே அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி, உடனடியாக அங்கிருந்து ஓடி வந்து தன்னுடைய தாயிடம் நடந்ததைப் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து அவரது தாய் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து ஜெய்சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சிக்கன் முட்டை விலை கிடுகிடு சரிவு.. அசைவ பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!