குஜராத் மாநிலம் ஜாம்நகர் நகரில் உள்ள ஒரு கடைக்கு வெளியே சிறுமி ஒருவரிடம் முதியவர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம், செப்டம்பர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.30 மணியளவில் ஜாம்நகரின் அப்னா பஜார் பகுதியில் நடந்துள்ளது.
அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன், சிறுமியை அருகில் அழைத்த முதியவர், அவர்களுடன் விளையாடுவது போல நடித்து, சிறுமியை மடியில் அமர வைத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்தச் செயல் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின்போது அங்கிருந்த மற்றொரு சிறுவன், அந்தச் சிறுமியை முதியவரிடமிருந்து விலக்க முயன்றுள்ளார். பின்னர், அருகில் இருந்த இளைஞர் ஒருவர் அங்கு வந்து சிறுமியை மீட்டுள்ளார். பின்னர், உடனடியாக, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. “நகரத்தின் பாதுகாப்பு எங்கே?” என்று பலரும் கேள்வி எழுப்பி, இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பலைகளுக்குப் பிறகு, ஜாம்நகர் போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய முதியவரை விரைந்து அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.
Read More : கிருமிகளின் பண்ணையாக மாறும் கழிவறை..!! டாய்லெட்டில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இந்த 3 பொருட்களே போதும்..!!



