பழைய ஓய்வூதிய திட்டம்.. நாளை முக்கிய அறிவிப்பு..! முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போகும் குட்நியூஸ்..!

Old Pension Scheme copy

தமிழ்நாடு அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களில் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.. அதன்பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது..


இதனிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. எனினும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் கடந்த காலங்களில் நடத்தினர்..

இந்த சூழலில் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் சாத்தியக் கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககந்தீப் சிங் பேடி தலைமையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது.. இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது..

இதையடுத்து பல்வேறு சங்கங்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்திய இந்த குழு, கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது..

இந்த சூழலில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இவர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன..

இந்த நிலையில் ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் தலைமையிலான குழு கடந்த 30 ம் தேதி சமர்ப்பித்தது..

இந்த நிலையில் பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.. அப்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போட்டோ ஜியோ அமைப்பினர் “ பழைய ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை நல்ல அறிவிப்பை வெளியிடுவார்.. 23 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் நாளை எங்கள் கோரிக்கை அமல்படுத்தப்படும்.. எங்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

கள்ளக் காதலனின் ஆணுறுப்பை வெட்டிய திருமணமான பெண்! புத்தாண்டு தினத்தில் வீட்டுக்கு வரவழைத்து கொடூர தாக்குதல்..!

Fri Jan 2 , 2026
மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு தன்னை திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை, பெண் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண் தனது காதலனின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. காயமடைந்த அவர் எப்படியோ உதவி பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி […]
woman affair

You May Like