கள்ளக்காதலனுடன் விடிய விடிய மொட்டை மாடியில்..!! நேரில் பார்த்த 16 வயது மகள்..!! விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Sex 2025 3

சென்னை ராமாபுரத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், உறவினரே பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தமிழ் நகர் அனெக்ஸ் பகுதியில் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்த 37 வயது புஷ்பா வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த புஷ்பாவுக்கும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த டெய்லர் கார்த்திக் (உறவினர்) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.


சம்பவத்தன்று இரவு புஷ்பாவின் வீட்டிற்கு வந்த கார்த்திக், அவருடன் பேசிக்கொண்டிருக்க மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் வெடித்ததில், ஆத்திரமடைந்த கார்த்திக் புஷ்பாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த புஷ்பா ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து, கார்த்திக் தலைமறைவானார்.

இரவு 11 மணி அளவில் அம்மாவும் கார்த்திக்கும் மாடியில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மகள், அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை மாடிக்குச் சென்று பார்த்தபோது, தாய் முகம் மற்றும் கைகளில் காயங்களுடன் சடலமாக கிடப்பதைக் கண்டு அவர் கதறித் துடித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக ராமாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், புஷ்பாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆத்திரத்தில் கார்த்திக் நடத்திய தாக்குதலே புஷ்பாவின் மரணத்திற்குத் தற்கொலை எனக் கண்டறியப்பட்டது. தலைமறைவாக இருந்த கார்த்திக்கை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

Read More : எவன் கூட ஊர் சுத்தப் போற..? மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவன்..!! ஃபிரிட்ஜுக்கு பின்னால் தெரிந்த உருவம்..!!

CHELLA

Next Post

Breaking : ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு..! மீண்டும் மக்கள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை..!

Sat Feb 28 , 2026
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
jewel 1

You May Like