நீங்கள் எந்த தேதியில் பிறந்தீர்கள்..? உங்களுக்கான சரியான துணை யார் தெரியுமா..? ஈசியா கண்டுபிடிக்கலாம்..!!

Radix Number 2025

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களது ஆளுமை, மனநிலை, தொழில்நடத்தல் என பலவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.


ரேடிக்ஸ் எண் :

ஒருவரின் பிறந்த நாளை வைத்து இந்த ரேடிக்ஸ் எண்ணை கணக்கிட வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் பிறந்த தேதி 22 என்றால் உங்களின் ரேடிக்ஸ் எண் 4 ஆகும். பிறந்த தேதி இரட்டை எண்ணில் இருந்தால் அதை கூட்டி கணக்கிட்டு கொள்ளுங்கள். இந்த எண் மூலம், யாருடன் வாழ்க்கைத் துணையாக நீங்கள் மனதளவில் பொருந்துவீர்கள் என்பதை அறியலாம்.

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28
பொருத்தமான எண்கள்: 2, 3, 9

இவர்கள் இயற்கையிலேயே ஒரு நாயகன் போல தங்களை நிலைநிறுத்துவார்கள். எண் 2 அமைதியுடன் இவர்களுக்கு பின்பற்றுவர். எண் 3 நல்ல வழிகாட்டியாக, முடிவெடுப்பதில் துணைபுரிவார். எண் 9 தன்னலமற்ற ஆற்றலை தரக்கூடியவர்.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29
பொருத்தமான எண்கள்: 1, 2, 3

அழகு, கலை, காதலானது இவர்களின் இயல்பு. எண் 1 இவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். எண் 3 ஆன்மிகமும் அறிவாற்றலும் நிறைந்தவராக வழிகாட்டுவார்.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30
பொருத்தமான எண்கள்: 1, 2, 9

தத்துவம், ஒழுக்கம் மற்றும் அறிவின் அடையாளமாக உள்ளவர்கள். எண் 1 மற்றும் 3 இணைந்து ஒரு சக்திவாய்ந்த கூட்டணியாக விளங்கலாம். எண் 9 உடன் சேர்ந்து, ஒருவரின் ஞானமும் மற்றொருவரின் செயல்பாடும் வெற்றிக்கான பாதையை உருவாக்கும்.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31
பொருத்தமான எண்கள்: 5, 7, 8

மனக்கிளர்ச்சி, தனிச்சிறப்பான சிந்தனைகள் கொண்டவர்கள். எண் 5 நண்பர்களாக சிறந்தவர்கள். எண் 7 வாழ்க்கைத் துணையாக பொருந்தக்கூடியவர். எண் 8 அமைதியாக இருந்தாலும், சமூக சேவைக்கு முனையக் கூடியவர்.

பிறந்த தேதிகள்: 5, 14, 23
பொருத்தமான எண்கள்: 1, 4, 6

சொற்பொழிவிலும் சமூக தொடர்பிலும் சிறந்து விளங்குபவர்கள். எண் 1 அதிர்ஷ்டத்தை தரலாம். எண் 4 நண்பர்களாகவே பொருத்தம்; வாழ்க்கைத் துணையாக அல்ல. எண் 6 மன அமைதியை பெற்றுத் தரும்.

பிறந்த தேதிகள்: 6, 15, 24
பொருத்தமான எண்கள்: 4, 5, 8

இவர்கள் கண்ணியத்துடன், நாகரிகமாக நடந்து கொள்வார்கள். எண் 5 வாழ்க்கையில் முக்கிய ஆலோசகராக இருப்பார். எண் 8 உடன் வணிகம் அல்லது பணியில் முன்னேற்றம் காணலாம்.

பிறந்த தேதிகள்: 7, 16, 25
பொருத்தமான எண்கள்: 1, 2, 9

உள்ளுணர்வு மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள். எண் 1 முன்னேற்றம் தரும் சக்தி. எண் 2 திருமணத்திற்கு ஏற்ற இணை. எண் 9 நடைமுறை அறிவு கொண்டு வழிகாட்டுவார்கள்.

பிறந்த தேதிகள்: 8, 17, 26
பொருத்தமான எண்கள்: 1, 2

தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் கொண்டவர்கள். எண் 1 ஆற்றலையும் மகிழ்ச்சியையும் சேர்க்கலாம். எண் 2 உறுதுணையாக இருக்கும்.

பிறந்த தேதிகள்: 9, 18, 27
பொருத்தமான எண்கள்: 1, 4, 5

வலிமை, நேர்மை, செயல்திறன் என அனைத்திலும் முன்னிலை வகிப்பவர்கள். எண் 1 உதவியாகவும் உறுதியாகவும் இருப்பர். எண் 4-ஐ நீண்டகால உறவுகளில் தவிர்க்க பரிந்துரை செய்யப்படுகிறது. எண் 5 சக்திவாய்ந்த நடுநிலையான அணியாக இருப்பர்.

Read More : எலுமிச்சையில் இவ்வளவு ரகசியம் இருக்கா..? மக்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

CHELLA

Next Post

பிளஸ்1 மாணவர்களே ரெடியா..? இன்று முதல் ஆரம்பம்..!! உங்களுக்கு ரூ.1,500 கிடைக்கப் போகுது..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Aug 22 , 2025
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய திறன் மேம்படுவதற்காக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல்’ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், மாணவர்களின் இலக்கியப் பார்வை, வாசிப்பு நுண்ணறிவு, மொழிப்பண்பு ஆகியவை மேம்படும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் […]
School Exam 2025

You May Like