குலதெய்வத்திற்கு எந்த நாளில் விரதம் இருக்கலாம்..? இப்படி செய்தால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.!!

God 2025 3

ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியமான ஒன்று. தினசரி தொழில் வாழ்க்கையின் சுழற்சி, குடும்ப பொறுப்புகள், எதிர்பாராத தடைகளை நிவர்த்தி செய்ய குலதெய்வ வழிபாடு கட்டாயம் இருக்க வேண்டும். தினமும் வீட்டில் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், வாரத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விரதம் இருந்து பிரார்த்திப்பது, குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.


அந்த வகையில், வியாழக்கிழமையன்று, வீட்டை சுத்தப்படுத்திய பிறகு குளித்துவிட்டு, பூக்கள் அணிவித்து ஒரு தீபத்தை ஏற்றி குலதெய்வத்தின் நாமத்தை நினைத்து விரதம் தொடங்க வேண்டும். உங்கள் வேண்டுதல் 14-வது வாரம் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, ஒரே ஒரு குறிக்கோளை வைத்து தான் இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். 14-வது வாரம் வரையும் அதே குறிக்கோள் தான் இருக்க வேண்டும்.

உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் அந்த நாளில் ஒரு வேளை மட்டும் உணவருந்த வேண்டும். அது கூட, நாட்டு பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிர் சாதம் என்றால், சிறந்தது. உப்பு சேர்க்காமல் சாப்பிடலாம். இதை சுவைக்க முடியாதவர்கள் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் வீட்டிலேயே இருக்கும் பெண்களாக இருந்தால், வியாழக்கிழமை நாள் முழுவதுமே குலதெய்வத்தின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். அதாவது, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது மட்டும். அதேபோல், மாலை நேரத்தில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, வெள்ளி, பித்தளை அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அதை மனதில் வைத்திருக்கும் வேண்டுதலுக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

இவ்வாறு, ஒவ்வொரு வியாழனும் ஒரு நாணயம் சேர்க்க வேண்டும். 14 வாரங்கள் முடிந்தவுடன், அந்த நாணயங்களை எடுத்துச் சென்று குலதெய்வ கோயிலில் செலுத்தலாம். கோயில் அருகில் இல்லாதவர்கள், அதை மஞ்சள் துணியில் முடிந்து பாதுகாத்து வைத்து, கோயிலுக்குச் செல்லும் போது எடுத்துச் செல்லலாம்.

இந்த 14 வார வழிபாடு முழுமையடையும் போது, உங்கள் மனதில் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வழிபட வேண்டும். ஆனால், தேவையை மட்டும் நினைத்து, கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொள்வதும் முக்கியம். அதற்கான முயற்சியும் நீங்கள் தொடர வேண்டும். உங்கள் வீட்டை ஒளியுறச் செய்யும் தூண்டில் போல, உங்கள் குலதெய்வம் ஊன்றுகோலாக திகழும். இந்த விரதம் நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Read More : மக்காச்சோளத்தின் மகத்தான நன்மைகள்!. இவ்ளோ இருக்குன்னு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா தவிர்க்கமாட்டீங்க!.

CHELLA

Next Post

சூப்பர் வாய்ப்பு..! இனி குறைந்த விலையில் சொந்த வீடு..! மத்திய அரசு அறிவிப்பு...! முழு விவரம்

Mon Aug 18 , 2025
நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு […]
house loan 2025

You May Like