ஒரு காலத்தில் ஹிட் ஹீரோயின்.. பணத்துக்காக நண்பர்களே படுக்கைக்கு அழைத்த சோகம்..! நடிகை கிரணுக்கு இப்படி ஒரு நிலமையா..?

13316716 kiran 1

வடஇந்தியாவில் இருந்து வந்து கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகை கிரண் ரத்தோட். பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருந்த அவர், தமிழ் திரையுலகில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த சரண் இயக்கிய ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் விக்ரமின் கேரியரிலும், கிரணின் கேரியரிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.


கமர்ஷியல் ஆக்சன் படமாக வந்த ஜெமினி சூப்பர் ஹிட்டாகியதால், கிரணுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவர்மேல் ஒட்டிய “கிளாமர் ஹீரோயின்” என்ற முத்திரை நீங்காமல் இருந்தது. அதை உடைக்க உதவியது சுந்தர் சி இயக்கிய, கமல் ஹாசன் நடித்த அன்பே சிவம் படம். அதன் பிறகு அஜித் நடித்த வில்லன், பிரசாந்த் நடித்த வின்னர் போன்ற படங்களிலும் நடித்தார். ஆனால் திடீரென அவரின் மார்க்கெட் வீழ்ச்சி சந்தித்தது.

பல வருடங்கள் திரையுலகில் இருந்து விலகி இருந்த அவர் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில் மீண்டும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தச் சூழலில் கிரண் பற்றி ஒரு விஷயம் பேசப்படுகிறது. அதாவது வாய்ப்பு எதுவும் இல்லாத சூழலிலும், கொரோனா காலகட்டத்திலும் கிரணிடம் ஒரு ரூபாய்கூட பணம் இல்லையாம். இதன் காரணமாக தனது நண்பர் குழுவில் பணம் கொஞ்சம் கடனாக கேட்டாராம்.

உடனே அதில் சிலர் நாங்கள் பணம் தருகிறோம்; பதிலுக்கு படுக்கைக்கு அழைத்தார்களாம். அப்போது நண்பர்களே இப்படி இருக்கிறார்களே என்று மனம் நொந்துள்ளார். அப்போதுதான் இங்கு யாருமே உண்மையில்லை என்று நினைத்தாராம் கிரண். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

Read more: Flash : பீகாரில் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க தயாராகும் பாஜக கூட்டணி.. இந்தியா கூட்டணியின் நிலை என்ன?

English Summary

Once a hit heroine.. the tragedy of being invited to bed by her friends for money..! Is this the situation for actress Kiran..?

Next Post

சவாலில் ஜெயித்த நிதிஷ் குமார்..!! அரசியலில் இருந்து விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்..? பீகாரில் அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை..!!

Fri Nov 14 , 2025
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 46 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக 67.13% என்ற அதிகபட்ச வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகள் மற்றும் பிற வாக்குகளின் அடிப்படையில், ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி.) […]
Prasanth Kishore 2025

You May Like