ஒருவர் பலி; தூத்துகுடி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து.. 35 பேரின் நிலை என்ன?

sivakasi fire 1641015343

தூத்துக்குடி எட்டையபுரத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்..

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இனாம் அருணாசலபுரம் – தோமாலைபட்டி அருகே உள்ள ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமான நிலையில், ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..


உடல் கருகிய நிலையில் கிடந்த ஒரு ஆணின் சடலத்தை தீயணைப்பு துறையினர் கைபற்றி உள்ளனர்.. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 35 பேர் சிக்கி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. மீட்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே இதில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம் தெரியவரும்.. நீண்ட நேரம் போராடிய பின்னரே தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More : அஸ்தியை போல் கரைக்கப்பட்டு.. மீண்டும் குப்பையாக்கப்பட்ட மனுக்கள்.. கொந்தளித்த இபிஎஸ் ..

RUPA

Next Post

ஸ்மார்ட்போன் பற்றிய இந்த வதந்திகளை ஒருபோதும் நம்பாதீங்க.. உங்க போனுக்கு தான் ஆபத்து..!

Fri Aug 29 , 2025
சமூக ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர்.. ஏரோபிளேன் மோடில் சார்ஜ் போட்டால், போன் வேகமாக சார்ஜ் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் சிலர் போனின் பேட்டரியை ஃப்ரீசரில் வைத்திருப்பது அதை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். நம்மில் பலரும் இது போன்ற வதந்திகளை கேட்டிருப்போம்.. சிலர் இந்த ட்ரிக்களை முயற்சி செய்து பார்த்திருப்போம்.. ஆனால் இந்த வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மை […]
smartphones myths

You May Like