இந்தியாவில் நீண்ட காலமாக நீரிழிவு நோய் ஒரு தொடர்ச்சியான சுகாதார சவாலாக இருந்து வருகிறது. அப்போலோ நடத்திய ஆய்வு வெளியிட்டுள்ள புதிய தரவுகள், இந்த நிலைமை மேலும் கவலைக்குரியதாக மாறியிருப்பதை காட்டுகின்றன.
மொத்தம் 4.5 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தது. மேலும் மூன்று பேரில் ஒருவருக்கு முன்நீரிழிவு (pre-diabetes) இருந்தது. இதன் மூலம், பெரியவர்களில் சுமார் 60% பேருக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் குறைபாடு இருப்பது தெரிய வருகிறது.
40 வயதுக்குப் பிறகு நீரிழிவு அபாயம் அதிகரித்தல்
வயதின்படி தரவு பார்க்கும்போது: 40 வயதுக்கு குறைவானவர்களில் 7% மட்டுமே நீரிழிவு நோயாளிகள் ஆவர்.. ஆனால் 40–55 வயதுக்குள் இது 26% ஆக 4 மடங்கு அதிகரிக்கிறது. 55 வயதிற்கு மேலே 44% ஆக அதிகரிக்கிறது. 40 வயதிற்கு குறைவானவர்களில் கூட 1/3 பேர் முன்நீரிழிவு நிலையில் இருந்தனர். அதாவது, நீரிழிவு வரும் பல வருடங்களுக்கு முன்பே உடலில் மாற்றங்கள் தொடங்கிவிடுகின்றன. நீரிழிவு வருவதற்கு முன் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் தெளிவாக சொல்கின்றன..
மெனோபாஸ் மற்றும் பெண்களில் அதிகரிக்கும் நீரிழிவு அபாயம்
அப்போலோ மருத்துவமனையின் கே.ஆர். நாராயணன் இதுகுறித்து பேசிய போது “ மெனோபாஸ் காலத்தில் பெண்களின் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைகிறது. இதனால் கொழுப்பு மற்றும் சர்க்கரையை பொரித்தெடுக்கும் திறன் குறைகிறது. அதே போல், பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு, கொலஸ்ட்ரால் உயர்வு
போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன..
இதனுடன் மெதுவான மெட்டபாலிசம் மற்றும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தல் ஆகியவை சேர்ந்து, மெனோபாஸ் பின் பெண்களிடம் 14% – 40% வரை நீரிழிவு அபாயம் அதிகரிக்கிறது. அதனால், 40 மற்றும் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் இரத்தச் சர்க்கரையை சீராக பரிசோதித்துக் கொள்ளவும், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மிகவும் முக்கியம்.” என்று தெரிவித்தார்..
நீரிழிவு மட்டுமில்லாமல், இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு அடர்த்தியும் மெனோபாஸ் தொடர்பான மாற்றங்களால் பாதிக்கப்படலாம். அதனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்.
முன்நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு: ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்தால் மாற்றமா?
முன்நீரிழிவு மற்றும் Type 2 diabetes ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம் அல்லது தாமதிக்கலாம்.. டைப் 2 நீரிழிவு ரிமிஷனுக்கு நிரூபிக்கப்பட்ட ஒரே வழி உடல் எடை குறைப்பது. ஆரம்ப நிலையில் இருக்கும் அதிக எடை / பருமனுள்ளவர்களுக்கு
அவர்கள் உடல் எடையின் 15% குறைத்தால், ரத்த சர்க்கரையை இயல்புக்கு கொண்டு வந்து, நிலையை ரிமிஷனில் வைக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. இந்த எடைக்குறையை தொடர்ந்து வைத்திருக்க முடிந்தால், நீரிழிவு மீண்டும் வராமல் தடுப்பதும் கூட.
இந்தியா முழுமையாக நீரிழிவு/முன்நீரிழிவு விகிதத்தை குறைக்க வேண்டுமெனில், சிகிச்சை அளிப்பதிலிருந்து ஆரம்பமே பரிசோதனை செய்து அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைக்கு மாற வேண்டும். ஒழுக்கமற்ற உணவு, உடற்பயிற்சி குறைவு, குடும்ப வரலாறு ஆகியவற்றால் அபாயத்தில் உள்ளவர்கள் முன்பே பரிசோதனை தொடங்குவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்..
Read More : இந்த ரயிலில் உங்களுக்கு 3 வேளையும் இலவச உணவு கிடைக்கும்..! எந்தப் பாதையில் பயணிக்கிறது தெரியுமா?



