இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் கூலி திரைப்படத்தின் மோனிகா பாடல் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பரியேறும் பெருமாள். முதல் படத்திலேயே சாதிய ஒடுக்குமுறைகளை எடுத்துக் காட்டி கவனம் ஈர்த்தார். இதையடுத்து, நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அப்படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை கோடிட்டு காட்டி இருந்தார். பின்னர் மாமன்னன் படத்தின் மூலம் அரசியலில் நடக்கும் சாதிய பாகுபாடுகள் பற்றி பேசினார். இந்த படமும் செம ஹிட் ஆனது.
தொடர்ந்து அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்கினார். அப்படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து அழாதவர்களே இருக்க முடியாது. இந்த வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக பைசன் காளமாடன் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் கூலி திரைப்படத்தின் மோனிகா பாடல் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது 50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்ணை ஆட வைக்கும் சினிமாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். 50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் ஆடும் பொழுது ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடினால் அது காதல். பல ஆண்களுடன் பல பெண்கள் ஆடினால் அது கொண்டாட்டம்.. ஆனால் சுற்றி பல ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் ஆடுவது என்ன கலாச்சாரம்? காலம் காலமாக பெண்களை ஒரு போதை பொருளாகவே பார்க்கின்றனர் என்று கூறியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பல்வேறு தரப்பினரிடமும் எதிர்வினைகளை கிளப்பியிருக்கின்றது.
Read more: தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும்..? EPS அழைப்பை நிராகரித்த சீமான், விஜய்..!!