’இனி ஆதார் மட்டும் போதும்’..!! டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ கணக்கு ஆக்டிவேட் செய்யலாம்..!! எப்படி தெரியுமா.?

டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் மூலம் யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்யும் வசதியை பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அனைவருக்கும் சேர்க்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘உங்களுக்கு தெரியுமா..? யுபிஐ பதிவு செய்வதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. யுபிஐ அலையில் இணைய ஆதார் கார்டு ஸ்கேன் செய்தால் போதுமானது’ எனத் தெரிவித்துள்ளது. ஆதார் ஓடிபி மூலம் யுபிஐ ரகசிய எண் அமைக்க, அல்லது மாற்றியமைப்பதற்கு சிறந்த மற்றும் எளிதான வழியாகும். மேலும், டெபிட் கார்டு இல்லாத மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பயன்பெற விரும்பும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.


யுபிஐ செயலியில் ரகசிய எண்ணை மாற்றுவது எப்படி..?

  • யுபிஐ செயலியில் புதிய ரகசிய எண் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆதார் அடிப்படையிலான சரிப்பார்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டையின் கடைசி 6 எண்களை பதிவு செய்ய வேண்டும்.
  • செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
  • சரிபார்த்த பின், புதிய ரகசிய எண்ணை பதிவிட்டு, உறுதி செய்யுங்கள்.

இதற்கு செல்போன் எண், ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்குடன் இணைத்திருப்பது அவசியம். வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணும், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும்.

CHELLA

Next Post

ரூ.1,750 செலுத்தினால்.. மத்திய அரசு ரூ.1 லட்சம் கடன் வழங்குகிறதா..? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன..

Tue Jan 31 , 2023
பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.. அந்த செய்தியில் “ முத்ரா கடன் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடனின் விவரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 36 மாத காலத்திற்கு ரூ.1 லட்சம் கடனாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பந்தக் கட்டணமாக ரூ.1,750 செலுத்தினால் ரூ.1 […]
6f4e0229138bf6f84b96c5eab5d3ae3c1d5ff5e74579457db471873ddf259e05

You May Like