செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான OpenAIயின் CEO சாம் ஆல்ட்மேன், ChatGPT குறித்து ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
OpenAI நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில், அவர் பேசும்போது, “மக்கள் ChatGPT-யை மிக அதிகம் நம்புகிறார்கள். ஆனால், அது தவறான தகவல்களை அளிக்கக்கூடியது. மாயத்தோற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால், இதைப் பயன்படுத்தும்போது நிதானமாக அணுக வேண்டும்,” என்றார்.
ChatGPT புதிய அம்சங்களுடன் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் அதே வேளையில், தொழில்நுட்பத்தில் இன்னும் குறிப்பிடத்தக்க வரம்புகள் உள்ளன, அவை நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கவனிக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.
ChatGPT-யின் தொடர்ச்சியான நினைவகம் (persistent memory), விளம்பர ஆதரவு போன்ற புதிய அம்சங்கள் பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக இருந்தாலும், அவை தனியுரிமை சிக்கல்களையும் உருவாக்கியுள்ளன. இதையும் நேரடியாக ஒப்புக்கொண்ட ஆல்ட்மேன், இந்த புதிய அம்சங்கள் பயனர் தகவல்களை எவ்வாறு கையாளுகின்றன என்பதையும் வெளிப்படையாக விளக்க வேண்டியது நமது கடமை என்றார்.
தற்போதைய கணினிகள் மற்றும் சாதனங்கள், AI இல்லாத உலகத்திற்காக உருவாக்கப்பட்டவை. எதிர்காலத்தில், AI-இயக்கப்படும் சூழ்நிலைக்கு ஏற்ற புதிய சாதனங்கள் தேவைப்படும் என அவர் தெரிவித்தார். இந்தக் கருத்துக்களை அவர் தனது சகோதரர் ஜாக் ஆல்ட்மேனின் பாட்காஸ்டில் வெளிப்படையாக பகிர்ந்தார்.
Read more: வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம்..!!