ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நடந்து வரும் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நேற்று இந்திய ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்தது.. இந்த தகவல்களின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது எல்லையைத் தாண்டி ஊடுருவ முயன்ற இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் கொண்ட குழுவை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, நேற்றிரவு தேக்வார் செக்டாரின் கல்சியன்-குல்பூர் பகுதியில் துப்பாக்கி சண்டை தொடங்கியது. பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிவசக்தி நடவடிக்கை: வெற்றிகரமான ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய ராணுவத்தின் எச்சரிக்கை துருப்புக்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை கொன்றுவிட்டன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இராணுவப் பிரிவின் ஒருங்கிணைந்த உளவுத்துறை தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு பங்களித்தது என்றும் அவர்கள் கூறினார்.
“விரைவான நடவடிக்கை மற்றும் துல்லியமான துப்பாக்கிச் சூடு ஆகியவை தீய நோக்கங்களை முறியடித்தன. 3 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தனர்..
முன்னதாக, ராணுவம் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.. அந்த பதிவில் “ ஊடுருவல்காரர்களுடனான ஆரம்ப தொடர்பு குறித்த விவரங்களை வழங்கியது. அந்தப் பதிவில், “பூஞ்ச் மாவட்டத்தின் Gen பகுதியில் உள்ள வேலியில் இரண்டு நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் பாதுகாப்பு படையினரால் கவனிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடந்தது. நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தது..
Read More : இந்தியாவுக்கும் சுனாமி ஆபத்தா? அச்சம் வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அறிவியல் மையம்..