பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவத்தின் வலிமை பாதுகாப்பு உத்தி உள்ளிட்டவைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கி வருகிறது என செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது.
இந்த பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒன்று 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மற்றொன்று 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக வடிவமைக்கப்படும். ஜம்மு – காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் குறித்து இதில் இடம்பெற்றிருக்கும்.
இந்த பாடம், சுமார் 8 முதல் 10 பக்கங்கள் வரை இருக்கும் என்றும் ராணுவ நடவடிக்கை, ராஜாந்திர முயற்சி மற்றும் அமைச்சகங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு ஒரு நாடு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி ஹிந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். அவர்களின் திலகத்தை குறிக்கும் விதமாக, இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு இப்பெயர் வைக்கப்பட்டது. இந்த ஆபரேஷன் இந்திய ராணுவத்தின் சாதனைகளில் ஒன்றாக பொறிக்கப்பட்டு விட்டது. கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம், பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மழைக்கால கூட்டத்தொடரின் போது ஒரு வார காலமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த சிறப்பு விவாதம் தொடங்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த நடவடிக்கை குறித்து முறையான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கோரின. மூன்று நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படும் 16 மணி நேர விவாதத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரின் முக்கிய உரைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: நாடுமுழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அவசர உத்தரவு!. மத்திய அரசு அதிரடி!.