தவெக தலைவர் விஜய்யையும் அடித்துக் கொல்ல வாய்ப்பு இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பி உள்ளது.
நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் சார்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த விஜய் “ விஜய் இவ்வளவு ஏன் பார்க்கவில்லை என்றால் அவர் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? 41 பேரை அடித்து கொன்றார்கள் மிதித்து கொன்றார்கள்.. அதே மாதிரி விஜய்யையும் அடித்து கொல்ல கூடாது என்பதற்காக தான் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கலாம்.. எனவே அரசு விஜய்க்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.. அந்த மக்களை விஜய் சந்திக்க வேண்டும்.. மறுபடியும் விஜய் அங்கு சென்றால் தள்ளுமுள்ளு வரும்.. இந்த சாக்கில் விஜய்யை காலி செய்து விட்டால் என்ன செய்வது?” என்று பேசினார்.
41 பேர் கூட்ட நெரிசலில் இறந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களை அடித்தே கொன்றதாகவும், விபத்தை கொலை என்ற கோணத்தில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.. அதன்படி அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து கூறினர்.. அப்போது தான் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார்.. இதற்காகவே காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.. மேலும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையையும் அவர் வழங்க உள்ளார்.. இதற்காக விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு தர கோரியும் தவெக தரப்பு நேற்று கரூர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கரூர் செல்ல விஜய் போட்ட கண்டிஷன் என்னென்ன தெரியுமா? பிரதமருக்கு இணையான பாதுகாப்பை கேட்கும் தவெக?