பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா வந்தால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு இபிஎஸ் பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ சிபில் ஸ்கோர் நடைமுறையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக பிரதமரிடம் மனு அளித்தேன்.. பயிர்க்கடனுக்கான விவசாயிகளின் சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறை நிறுத்துவைக்கப்பட்டுள்ளது.. மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..
பிரதமரிடம் நான் பேசிய பின்னரே சிபில் ஸ்கோர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது.. பயிர்க்கடன் வழங்குவதில் பழைய நடைமுறையே கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. எங்களை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பிரச்சனை ஏற்படும் போது இந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் முன்னணியில் இருப்பது அதிமுக தான்.. ” என்று தெரிவித்தார்..
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா வந்தால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ கற்பனையான, யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.. அடுத்த கட்சி குறித்து பேசும் போது அந்த கட்சியிடம் கேட்டால் பதில் கிடைக்கும்.. வேண்டுமென்றே விஷமத்தனமான கேள்விகளை கேட்டு பிரச்சனைகள் கிளப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அதெல்லாம் நடக்காது..” என்று தெரிவித்தார்.
கூட்டணி குறித்த கேள்வி குறித்து பதிலளித்த அவர் “ மற்ற கட்சிகளின் கூட்டணி குறித்து என்னிடம் கேட்டால், நான் என்ன பதில் சொல்ல முடியும்.. அந்தந்த கட்சிகளிடம் கேட்டால் தான் பதில் தெரியும்.. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு என்பது முடிந்து போன விஷயம்.. NDA கூட்டணியில் அதிமுக – பாஜக இருக்கிறது.. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் அதற்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. அதற்குள் யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது.. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணியில் யாரெல்லாம் இருப்போம் என்று தெளிவாக கூறுகிறேன்.. திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது, கல்வியை பொதுப்பட்டியலில் கொண்டுவராதது ஏன்? தேர்தல் நே கூட்டணி குறித்து பின்னர் பேசுகிறேன்..
கல்வி நிதியை விடுவிக்காமல் இருக்கும் மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ எங்களை பற்றி கேள்வி கேட்டால் நான் பதில் சொல்கிறேன்.. மற்ற தலைவர்களை பற்றி கேட்டால் நான் என்ன சொல்வது?” என்று தெரிவித்தார்..
Read More : #Flash : ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..