தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வகையில், அவரது அணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஓபிஎஸ் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அதிரடி முடிவெடுத்துள்ளனர்.
அணியில் இருந்து வெளியேறியுள்ள இந்த நிர்வாகிகள் அனைவரும், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தங்களை இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மட்டுமன்றி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் அணியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் தவெக நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், அடுத்த சில நாட்களில் ஓபிஎஸ் அணியிலிருந்து மேலும் பல முக்கியத் தலைவர்கள் விஜய்யின் கட்சிக்குத் தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை மீட்பதற்கான சட்டப் போராட்டங்களில் ஓபிஎஸ்-க்குத் தொடர் தோல்விகளே கிடைத்து வருகின்றன. தேர்தல் களத்திலும், கட்சி ரீதியாகவும் அவர் ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது சொந்தக் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்களிலேயே நிர்வாகிகள் கொத்து கொத்தாகப் பிரிந்து செல்வது அவருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
Read More : அரசுப் பேருந்துகளில் இனி பாடல்கள் ஒலிக்க தடை..!! போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு..!!



