Flash: முன் சீட்டில் OPS.. பின் சீட்டில் செங்கோட்டையன்.. பசும்பொன் நோக்கி இருவரும் ஒரே காரில் பயணம்..!!

ops sengottaiyan

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிழவி வந்தது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.

அதன் பிறகு தான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி செங்கோட்டையன் ட்விஸ்ட் கொடுத்தார். இந்த நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரின் முன் சீட்டில் ஒபிஎஸும், பின் சீட்டில் செங்கோட்டையனும் அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Read more: அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கம் ஒரு நோயின் அறிகுறி தெரியுமா..? – எச்சரிக்கும் நிபுணர்கள்..!

English Summary

OPS in the front seat.. Sengottaiyan in the back seat.. Both of them are traveling in the same car towards Pasumpon..!!

Next Post

கல்லீரல் நோய்களை குணமாக்கும் மருதாணி..! புதிய ஆய்வில் ஆச்சர்ய தகவல்..! விவரம் இதோ..

Thu Oct 30 , 2025
பண்டிகை காலங்களில் நம்மில் பலரும் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து வைப்போம்.. இது நம் கைகளுக்கு அழகான சிவப்பு நிறத்தை வழங்குகிறது.. நமக்கு எளிதாக கிடைக்கும் மருதாணி இலைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. உடல் வெப்பத்தைக் குறைத்தல், புண்களை ஆற்றும் பண்பு, மற்றும் நகச்சுத்தி போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும். மேலும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் இது பலனளிக்கிறது. இந்த […]
henna n

You May Like