“ஓபிஎஸ் 1000 எதிரிக்கு சமம்.. திமுகவின் B டீமாக இருந்து அதிமுகவை அழிக்க நினைத்தார்..” விளாசிய சி.வி. சண்முகம்..!

cv shanmugam ops stalin

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஓபிஎஸ் திமுகவில் இனைந்தது மிகப்பெரிய சூழ்ச்சி.. அதிமுகவை பிளவுப்படுத்த வேண்டும் என்று நடந்த சூழ்ச்சி.. அன்று அம்மா உயிரோடு இருந்த போதே, அம்மாவை அடக்கம் செய்துவிட்டு பதவியேற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தால் அவர் பெரிய மனிதர்.. ஆனால் அன்று பதவி ஆசையில், இரவோடு இரவாக எல்லோரிடமும் கையெழுத்து பெற்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


அவருக்கு பதவி கொடுத்தால் அவர்கள் நண்பர்கள், பதவி கொடுக்கவில்லை என்றால் துரோகிகள்.. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றார் போல் பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது போல் ஓபிஎஸ் மாறிக் கொண்டே இருப்பார்.. அடிக்கடி நிறம் இவர் பச்சோந்தியை விட மோசமானவர்.. அதிமுகவுக்கு பிடித்த சனி இவர்.. மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டு, அம்மா இல்லை, கட்சியை அழித்துவிடலாம், சின்னத்தை முடக்கி விடலாம் என்று உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக ஓபிஎஸ் இருந்தார்.. எதிரியை விட துரோகி தான் மிக மிக ஆபத்தானவர்.. ஒரு துரோகி 1000 எதிரிக்கு சமம்..

அதிமுக அழிக்க வேண்டும் என்றால், அதிமுகவில் இருந்தே ஒருவரை கைக்கூலியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் இன்று திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்… அம்மாவின் மறைவுக்கு பின் அம்மாவின் ஆட்சியை கவிழ்க்க திமுகவோடு கைகோர்த்துக் கொண்டு சதி செய்தார்.. அவர் அதிமுகவை முடக்க நினைத்தார்.. எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடைகள் போட்டார்.. அதிமுக வேகமாக செயல்படாமல் பார்த்துக் கொண்டார்.. அதாவது திமுக செய்ய வேண்டிய பணியை அதிமுகவுக்கு எதிரான பணியை செய்தார்..

ஆனாலும் அவரை மன்னித்து ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்தோம்.. அதன்பின்னரும் அவர் அதிமுகவை அழிக்கும் வேலையை பார்த்தார்.. அதிமுக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தார்.. எனவே இதற்கு மேல் இவரின் துரோகத்தை சகித்துக் கொள்ள முடியாது என்று அதிமுக பொதுக்குழுவால் முடிவெடுக்கப்பட்டு இனி கட்சியில் இருக்கக் கூடாது என்று பொதுக்குழு வெளியேற்றியது.. வெளியேற்றிய பின்னரும் பல டிராமாக்களை போட்டார்.. அழுதார், புரண்டார்.. அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று டிராமா போட்டார்.. அவர் ஒரு தியாகி என்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகின்றனர்..

இன்று திமுகவை பார்க்கிறார், அமித்ஷாவை பார்க்கிறார்.. யார் யாரையோ பார்க்கிறார்.. இவர் திமுகவின் பி டீமாக இருக்கிறார்.. அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற திமுகவின் எண்ணத்தை இவர் நிறைவேற்றி வந்தார்.. ஓபிஎஸ் திமுகவின் பினாமி.. இதுதான் உண்மை..” என்று தெரிவித்தார்..

Read More : கூச்சமே இல்லையா ஓபிஎஸ்..? ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? அதிமுக காட்டமான கேள்வி..!

RUPA

Next Post

“ஓபிஎஸ்-ன் முடிவு துரதிருஷ்டவசமானது.. இதுக்கெல்லாம் ஒரு ஆள் தான் காரணம்..” இபிஎஸ் பெயரை சொல்லாமல் சசிகலா விமர்சனம்..!

Fri Feb 27 , 2026
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார்.. இதுகுறித்து அதிமுகவினர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடி வருகின்றனர்.. இந்த நிலையில் சசிகலா ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய […]
dmk stalin sasikala

You May Like