MLA பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்..! திமுகவில் இணைந்த கையோடு அதிரடி..!

Ops Stalin 2

அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை..


திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்-ஐ வரவேற்று முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில் “ ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!” என்று தெரிவித்துள்ளார்..

இந்த நிலையில் தேனி போடிநாயகன்னூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜானிமா செய்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. அதே போல் அவரது ஆதரவு எம்.எல்.ஏவுமான ஐயப்பனும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.. சென்னை தலைமை செயலகத்தில் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் வழங்கினார்..

Read More : 3 தொகுதிகள் கேட்ட ஓபிஎஸ்-க்கு ஷாக்..! ஸ்டாலின் கொடுத்தது எத்தனை தொகுதிகள் தெரியுமா? பரபரப்பு தகவல்..!

RUPA

Next Post

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு.. கண்கலங்கி உருக்கமாக சொன்ன வார்த்தை..!

Fri Feb 27 , 2026
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பெரும் திருப்பமாக, முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தெலங்கானா எம்.எல்.சி கே.கவிதா உள்ளிட்ட 23 பேரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றம் என்ன கூறியது? டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங் இந்த […]
aravind kejriwal

You May Like