பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், ஜி.கே, மணி, சசிகலா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..
இதனிடையே தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து பசும்பொன்னிற்கு 2 பேரும் ஒரே காரில் பயணித்தனர்.. பின்னர் இருவரும் திறந்த வேனில் இருவரும் பயணம் செய்தனர்.. தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பசும்பொன் அருகே டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனை சந்தித்து பேசினர்..
இதை தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் இணைந்து கூட்டாக மரியாதை செலுத்தினர்.. மேலும் 3 பேரும் சேர்ந்து தேவர் சிலை தீபாராதணை காட்டினர்.. அதிமுக தலைமைக்கு எதிராக இருக்கும் இந்த மூவர் அணி பசும்பொன்னில் கூட்டாக மரியாதை செய்தது தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த 3 பேரும் இணைந்திருப்பது அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக கருதப்படுகிறது..
கட்சியில் இருந்து நீக்கப்பட ஓபிஎஸ் உடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்று இபிஎஸ் கூறியிருந்த நிலையில், அவரின் கட்டுப்பாட்டை மீறி செங்கோட்டையன் ஓபிஎஸ், டிடிவி உடன் கை கோர்த்துள்ளார்.. இதனால் இபிஎஸ் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.. இபிஎஸ் அடுத்து முடிவு செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..



