முதுகில் குத்திய ஓபிஎஸ்..!! இனி மன்னிப்பே கிடையாது..!! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காட்டம்..!!

piyush goyal

மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, “இது எங்கள் குடும்ப விஷயம் போன்றது; பேச்சுவார்த்தை விவரங்களை இப்போது பொதுவெளியில் பகிர முடியாது. அனைத்தும் முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.


சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றிப் பேசுகையில், “தமிழக அரசியலில் ஓபிஎஸ் எவ்வளவு தேவையற்றவராக மாறிவிட்டார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா யாரை நம்பி முதலமைச்சர் பதவியை வழங்கினாரோ, அதே நபர் இன்று அவரது கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு முதுகில் குத்திவிட்டார். சுயமரியாதை உள்ள தமிழக மக்கள் இதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று சாடினார்.

இதற்கிடையே, திமுகவில் இணைந்த பிறகு இரண்டாவது நாளாக நேற்றும் அண்ணா அறிவாலயம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இனி அடிக்கடி அறிவாலயம் வந்து கொண்டே இருப்பேன்; தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக உள்ளது. எனது வருகைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

Read More : பெண்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.4,000இல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு..!! புதிய அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

CHELLA

Next Post

பெண் உருவத்தில் சிவபெருமான்..!! இந்த அதிசய கோயில் எங்கிருக்கு தெரியுமா..? வரலாற்று பின்னணி இதோ..!!

Mon Mar 2 , 2026
இந்தியாவின் ஆன்மீக நிலப்பரப்பில், குறிப்பாக வட இந்தியாவில், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பல விநோத வழிபாடுகளும் மர்மங்களும் நிறைந்த ஆலயங்கள் உள்ளன. அந்த வரிசையில், பிருந்தாவனத்தின் வம்சிவட் பகுதியில் அமைந்துள்ள ‘கோபேஷ்வர் மகாதேவ்’ திருக்கோவில் தனித்துவம் வாய்ந்தது. இங்குள்ள சிவலிங்கத்திற்குப் புடவை அணிவித்து, பெண் வடிவில் அலங்காரம் செய்து வழிபடும் விநோத நடைமுறை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த வழிபாட்டின் பின்னணியில் உள்ள மர்மமான மற்றும் தெய்வீகமான புராணப் பின்னணி […]
Sivan 2026

You May Like