தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.. மேலும் திருச்சி, கரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவ்ட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது..
இந்த நிலையில் தமிழ்நாடு புதுவை, காரைக்காலில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.. விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.. நாளை தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..
நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Breaking : ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைப்பு, விரைவில் புதிய சட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..



