ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் நடிகை சாவித்திரி. இவர் 1950களில் மிகவும் பிரபலமாகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார். மேலும், “தெலுங்கு சினிமாவின் ராணி” என்று அழைக்கப்பட்ட இவர், நடிகர் திலகம் சிவாஜியை போல் நடிப்பாற்றல் கொண்டதால், அவரை நடிகையர் திலகம் என்றே ரசிகர்கள் அழைத்தனர். இவர், சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், சாவித்திரியையும் திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் தான், சாவித்திரி – ஜெமினி கணேசன் விவகாரம் குறித்து ஜெமினி கணேசனின் மூத்த மகள் கமலா பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
அதில், சாவித்திரி ஒரு ராத்திரி நேரத்தில் கொட்டும் மழையில் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் கெட்டுப்போகி விடக்கூடாது என்பதற்காக எங்கள் தந்தை அவரை திருமணம் செய்து அந்தஸ்து கொடுத்தார். அவருக்கு தமிழ் பேச தெரியாது. கையெழுத்தும் போட தெரியாது. என் அப்பா தான் அனைத்தையும் அவருக்கு சொல்லிக் கொடுத்தார்.
ஆனால் சாவித்திரி, அப்பாவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்காங்கன்னு தெரிஞ்சும், அவரை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. மேலும், அவரை பிளாக் மெயில் செய்து 15 வருஷமா எங்க வீட்டுக்கே வராம பண்ணிட்டாங்க. எங்க குடும்பத்தையே கலைச்சது சாவித்திரிதான்” என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜெமினி – சாவித்திரிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். விஜய சாமுண்டேஸ்வரி, சதீஷ்குமார் கணேசன் ஆகியோர் தான். சினிமாவில் கொடி கட்டி பறந்த சாவித்திரி 19 மாதங்கள் கோமாவில் இருந்து, தன்னுடைய 47-வது வயதில் உயிரிழந்தார். அவருக்கு நீரிழிவு நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
Read More : சொந்தமா தொழில் தொடங்க ஆசையா..? தற்போதைய டிரெண்டிங் பிசினஸ் எது..? வருமானம் அள்ளலாம்..!!