படையப்பா 2 கன்ஃபார்ம்..! படத்தின் டைட்டில் இதுதான்..! ரஜினியே கொடுத்த செம அப்டேட்..!

rajinikanth

1999-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா.. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார்.. மேலும் சிவாஜி கணேசன், லட்சுமி, மணிவண்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா என பலர் நடித்திருந்தனர்.. ஆனால் இந்த படத்தில் அனைவரையும் வியக்க வைத்தது.. இவர்கள் அனைவரையும் தாண்டி நெகட்டிவ் ரோலில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தான்.. படையப்பா படத்தில் வரும் நீலாம்பரியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது..


பாட்ஷாவுக்கு பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை படையப்பா படம் பெற்றுத்தனது.. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவருக்கும் அதிக லாபத்தை கொடுத்தது..

தமிழ் சினிமாவில் ஹிட்டான பல படங்கள் தற்போது ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட வரும் நிலையில் தற்போது படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.. ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், அவரின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12-ம் தேதி படையப்பா படம் ரி ரிலீஸ் ஆக உள்ளது..

இந்த நிலையில் படையப்பா ரீ ரிலீஸ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அப்போது படையப்பா படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. படையப்பா படத்தில் நடிகர் சிவாஜி எப்படி கமிட் ஆனார்? ரம்யா கிருஷ்ணன் எப்படி கமிட் ஆனார் என்பது குறித்தும் பேசி உள்ளார்..

மேலும் படையப்பா 2 குறித்த அப்டேட்டையும் ரஜினி சொல்லி இருக்கிறார்.. இதுகுறித்து பேசிய அவர் “ எனது 50 ஆண்டு திரை வாழ்க்கையில், தாய்மார்கள் கேட்டை உடைத்து படம் பார்த்தது படையப்பா தான்.. 2.0. ஜெயிலர் போன்ற படங்களை நான் பண்ணும் போது படையப்பா 2 ஏன் பண்ணக் கூடாது என்று எனக்கு தோன்றியது.. படையப்பா படத்திலும் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நீலாம்பரி சொல்லி இருப்பார்.. படையப்பா 2 படம் வர உள்ளது.. படத்தின் டைட்டில் நீலாம்பரி.. அதை பற்றி கதை விவாதம் நடந்து வருகிறது.. அந்த படம் நன்றாக வந்துவிட்டால் படையப்பா மாதிரி இந்த படமும் ரசிகர்களுக்கு நல்ல படமாக..” என்று தெரிவித்தார்..

Read More : சிறகடிக்க ஆசை: கிரீஷின் அம்மா ஆவியை வைத்து திட்டம் போடும் ரோகிணி.. குடும்பத்தில் வெடிக்கும் சண்டை..! என்ன செய்ய போகிறாள் மீனா..?

RUPA

Next Post

20 பேர் உடல் கருகி பலி.. பலர் காயம்.. 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; இந்தோனேசியாவில் பெரும் சோகம்..!

Tue Dec 9 , 2025
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.. முதலில் நண்பகலில் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து பின்னர் மேல் தளங்களுக்கு பரவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நேரத்தில் சில […]
indonesia fire 1

You May Like