தமிழக அரசியலில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு கொண்டிருந்த மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் குடும்பத்தில் இருந்து மற்றுமொரு அரசியல் அதிரடி கிளம்பியுள்ளது. அவரது மகள் விருதாம்பிகை, தனது தந்தையின் பெயரிலேயே ‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி, அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளார். “மாவீரன்” என்று அழைக்கப்படும் தனது தந்தையின் லட்சியங்களை மீட்டெடுப்பதே […]
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் முறைப்படி கால்பதித்த பிறகு, திராவிட கட்சிகளுக்குப் புதிய சவால்கள் உருவாகியுள்ளன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, அக்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்துள்ள நிலையில், தற்போது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் தவெக-வை நோக்கி அணிவகுப்பது அரசியல் […]
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தங்களது உயர்கல்வியைத் தடையின்றித் தொடருவதை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ (CM Talent Search Exam) என்ற மிக முக்கியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசு தற்போது நீட்டித்துள்ளது. இந்தத் திறனாய்வுத் தேர்வின் […]
வெனிசுலா முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை சமீபத்தில் கைது செய்ததைப் போன்ற ஒரு அதிரடி நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளக்கூடும் என்ற யூகங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புடின் மீதான அத்தகைய நடவடிக்கை தேவையற்றது என்று கூறினார். மதுரோவுக்குப் பிறகு புடின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி மறைமுகமாகக் குறிப்பிட்டது குறித்துக் கேட்டபோது, […]
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று முன் தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஜனவரி 11, 2026-க்குள் மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும், இருப்பினும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும், மேலும் ஓரிரு இடங்களில் […]
அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.. மேலும் “ 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் […]
வேத ஜோதிடத்தில், புதன் கிரகம் வணிகம், பொருளாதாரம் மற்றும் பேச்சாற்றலின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே, புதன் கிரகம் தனது போக்கை மாற்றும்போது, சில ராசிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பிப்ரவரி மாத தொடக்கத்தில் புதன் வக்கிர நிலையில் இருக்கும். இதனால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையுடன், பங்குச் சந்தைகள் மூலமாகவும் பணம் சம்பாதிப்பார்கள். அப்படியானால், அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்… ரிஷபம் புதன் வக்கிர நிலையில் இருப்பது […]
வீட்டில் விநாயகர் படங்கள் மற்றும் சிலைகளை பக்தியுடன் வைத்திருப்பது நமது பாரம்பரியம். பலர் விநாயகரின் படங்களை பூஜை அறையில் மட்டுமல்லாமல், வீட்டின் சுவர்களிலும், கூடத்திலும், படுக்கையறையிலும் அலங்காரத்திற்காக வைத்திருக்கிறார்கள். சிலர் சிறிய சிலைகளை அதிக எண்ணிக்கையில் சேகரித்தும் வைக்கின்றனர். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, தேவைக்கு அதிகமாக விநாயகர் சிலைகளை வைத்திருப்பது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் பக்தியை அதிகரிக்க, சிலைகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, அவை வைக்கப்படும் விதமே முக்கியம் […]
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கதோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜாய் மகாபத்ரோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாய் ஒரு உள்ளூர் கடைக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் ஒரு உள்ளூர்வாசியால் தாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். ஜாய் சில்ஹெட் […]
சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது..சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகின்றனர்.. இந்த நிலையில் பராசக்தி படம் குறித்து நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் […]

