பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் சுட்டிகாட்டியது.. மேலும் பேறுகால விடுப்புக்கோரி வழக்குகள் வராதவகையில் அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
Read More : தவறுதலாகக் கூட இந்த விஷயங்களை கூகுளில் தேடாதீங்க.! உங்களுக்கு தான் பெரும் சிக்கல்..!



