பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடக கணக்குகள் மீது இந்தியாவில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படது. பாகிஸ்தானில் இருந்து வரும் ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் தள உள்ளடக்கங்களை நிறுத்துமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ஜூலை 2 ஆம் தேதி தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் பாகிஸ்தான் செய்தி சேனல்களின் யூடியூப் சேனல்கள் மீண்டும் செயல்பட்டது. மவ்ரா ஹோகேன், சபா கமர், அஹத் ராசா மிர், யும்னா ஜைதி மற்றும் டேனிஷ் தைமூர் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்திய பயனர்கள் பார்க்கும் வகையில் இருந்தன.
இந்த நிலையில் இன்று காலை முதல் பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகள் இந்தியாவில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. ஹனியா ஆமிர், மஹிரா கான், ஷாஹித் அப்ரிடி, மவ்ரா ஹோகேன் மற்றும் ஃபவாத் கான் போன்ற பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகள் இன்று காலை முதல் இந்திய பயனர்களால் அணுக முடியாததாக மாறியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கணக்குகள் செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.. “X, YouTube மற்றும் Meta-வில் சில கணக்குகளைப் பார்க்க முடிந்தால், சில மணிநேரங்களில் அவற்றை அணுக முடியாது. சில தொழில்நுட்பக் கோளாறுகள் தடையை நீக்க வழிவகுத்தன. இப்போது சரி செய்யப்பட்டுள்ளது” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.