ஜம்மு – காஷ்மீர் தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், “நாடு சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலேயே காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் திறம்பட கையாண்டிருக்க வேண்டும். பிரிவினைக்கு பிறகே நாட்டில் முதல் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இன்று வரை பல தலைமுறைகளை கடந்த பிறகும் போராடி கொண்டு இருக்கிறோம். 1947இல் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்தினார். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு, அதை புறக்கணித்துவிட்டது.
பாகிஸ்தான் முஜாஹிதீன் என்ற பெயரில் இந்தியாவின் ஒரு பகுதியை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது. அப்போதேம்m முஜாஹிதீன்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் மீட்கும் வரை ராணுவ தாக்குதலை நிறுத்தக்கூடாது என சர்தார் வல்லபாய் படேல் அறிவுறுத்தினார். அப்போது ஆரம்பித்த இந்த ரத்தக்களரி 75 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பஹல்காமில் நடந்தது அதன் ஒரு சிதைந்த வடிவம் மட்டுமே.
இந்திய இராணுவம் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. இந்தியாவிடம் வெற்றி பெற முடியாது என்பதை பாகிஸ்தானும் புரிந்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் என்பது பினாமி போர் அல்ல. அவை பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். அதுதான் அவர்களின் போர் உத்தி. எல்லைத் தாண்டிய தீவிரவாதம் மூலம் பாகிஸ்தான் போர் நடத்தி வருகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
Read More : பள்ளியில் மலர்ந்த காதல்..!! பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன்..!! அதிர்ச்சியில் ஆடிப்போன பெற்றோர்..!!